Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: பேருந்து கவிழ்ந்த விபத்தில் 38 பயணிகள் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது.

Bus Accident: முன்பக்கம் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து வந்து மோதிய கிரானைட் பாறை தா, பேருந்து கவிழ காரணம் என கூறப்படுகிறது.
பேருந்து கவிழ்ந்து 38 பேர் உயிரிழப்பு:
தென்கிழக்கு பிரேசிலில் சனிக்கிழமையன்று நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினாஸ் ஜெரெய்ஸ் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும், தீப்பற்றி எரிந்ததால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசிலின் ஃபெடரல் நெடுஞ்சாலைகளில் 2007 க்குப் பிறகு அரங்கேறிய மிக மோசமான விபத்து இது என அந்நாட்டு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா "பயங்கரமான சோகம்" என்று இந்த விபத்தை குறிப்பிட்டுள்ளார்.
BREAKING🚨🚨 Accident.
— TV 10 Gano Mazima (@TmcMazima) December 21, 2024
Thirty people are dead after a truck and passenger bus with over 45 in it have collided on a highway in Minas Gerais, Brazil.
The tire of the bus is reportedly to have been the cause of the accident after it blew off while at a high speed. pic.twitter.com/25jJalDJ3G
விபத்துக்கான காரணம் என்ன?
வடகிழக்கு பாஹியா மாநிலத்தில் உள்ள சாவ் பாலோவிலிருந்து, விட்டோரியா டா கான்கிஸ்டாவுக்குச் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. அப்போது பின்னால் இருந்து வந்துகொண்டிருந்த மற்றொரு வாகனமும் பேருந்தின் மீது மோத அது தீப்பிடித்து எரிய தொடங்கியது என்று தீயணைப்பு துறையினர் கூறினர். அதைதொடர்ந்து, வந்த முதற்கட்ட விசாரணையில், முன்னே சென்று கொண்டிருந்த டிரக்கில் இருந்து விழுந்த பெரிய அளவிலான கிரானைட் பாறை, பின்புறம் வந்த பேருந்தின் மீது மோதியுள்ளது. இதனால் தான் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய அந்த டிரக்கின் ஓட்டுனரை தேடும் பணியும் முடிக்கிவிடப்பட்டுள்ளது.
தொடரும் விபத்துகள்:
இறந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் குறைந்தது ஒரு குழந்தையும் அடங்குவர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரேசில் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நவம்பர் மாத இறுதியில், பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான அலகோவாஸில் ஒரு பேருந்து விபத்தில் தொலைதூர மலைப்பாதையில் பயணித்தபோது பள்ளத்தாக்கில் விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

