மேலும் அறிய
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் தொடங்கியது.

ரயில்
Source : whats app
இந்த சிறப்பு ரயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு ரயில்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06039) டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து அதிகாலை 12.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - சென்னை தாம்பரம் சிறப்பு ரயில் (06040) டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 01 ஆகிய புதன்கிழமைகளில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 04.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும்.
ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன குறைந்த கட்டணங்கள் மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்று திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு துவங்குகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கல்வி
கல்வி
திருச்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion