Good Bad Ugly Update: குட் பேட் அக்லியில் தரமான சம்பவம் இருக்கு! குட்டி டீசரிலே இசையில் மிரட்டிய ஜிவி பிரகாஷ்!
Good Bad Ugly Update: குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட்டாக இன்று வெளியான டீசரில் ஜிவி பிரகாஷின் மிரட்டலான இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Good Bad Ugly Update: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி படம் வெளியானது. இந்த படப்பிடிப்பிற்கு பிறகு தொடங்கி படப்பிடிப்பு முடிந்து பொங்கல் வெளியீட்டிற்குத் தயாராக இருந்த படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தின் வெளியீடு காரணமாக குட் பேட் அக்லி ரிலீஸ் தள்ளிப்போனது.
குட் பேட் அக்லி:
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. விடாமுயற்சி மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இல்லாவிட்டாலும் வழக்கத்திற்கு மாறான அஜித் படமாக இருந்தது. இந்த நிலையில், அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது குட் பேட் அக்லி படமே ஆகும்.
ஏனென்றால் படத்தின் அறிவிப்பு முதல், அடுத்தடுத்து ரிலீசான போஸ்டர்கள் என இந்த படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான ஒரு படமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று 7.03 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் தாமதமாக 8.03 மணிக்கு ரிலீசானது.
மிரட்டல் இசை:
Welcome to the world of GBU Maamey @trishtrashers mam as Ramya 💥 See you all on April 10 th ❤️🙏🏻 #AjithKumar sir @MythriOfficial @SureshChandraa sir ❤️🙏🏻 #GoodBadUgly pic.twitter.com/43dnjv9fNG
— Adhik Ravichandran (@Adhikravi) February 22, 2025
ஜிவி பிரகாஷின் மிரட்டலான பின்னணி இசையில் த்ரிஷா மாடியில் இருந்து ஒருவர் கீழே இறங்குவதை மிரட்சியுடன் பார்ப்பது போல இந்த காட்சி இருந்தது. நிச்சயம் த்ரிஷா ஆச்சரியத்துடன் பார்க்கும் அந்த நபர் அஜித்தாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஜிவி பிரகாஷ்குமாரின் அந்த இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிறவைத்துள்ளது.
கிரீடம் படத்திற்குப் பிறகு அஜித்தின் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவில்லை. இந்த நிலையில், அஜித் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே மாஸ்க்கு எல்லாம் மாஸ் என்று ஒரு பாடல் தயாராகி உள்ளதாகவும் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் கூறியிருந்தார்.
இது வெறும் டீசர்தான்:
முழுக்க முழுக்க ஆக்ஷன் கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக ஜிவி பிரகாஷின் இசை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஒரு சின்ன உதாரணமே இன்று வெளியாகியுள்ள ஒரு குட்டி டீசரில் ஜிவி பிரகாஷின் இசை ஆகும்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அவர் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரசன்னா, சுனில் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் பாதி காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், யோகிபாபு, அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரபு, ஷாகோ ஆகியோரும் நடிக்கின்றனர்.
ரிலீஸ் எப்போது?
ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு முதலில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தது. பின்னர், அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தமானார். இந்த படத்திற்கு விஜய் வேலுகுட்டி எடிட்டிங் செய்துள்ளனர். அபிநந்தன் - ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.





















