மேலும் அறிய
விபத்தால் அரசியலுக்கு வந்தவன், விரும்பி வரவில்லை.. சக்திக்கு மீறி செயல்பட முயற்சிப்பேன் - துரை வைகோ ஓபன் டாக் !
என்னதான் சட்டங்களை மாற்றினாலும் கூடுதல் சட்டங்களை கொண்டு வந்தாலும் மாற்றம் மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். - பாலியல் பிரச்னைகள் குறித்த கேள்விக்கு துரை வைகோவின் பதில்.

துரை வைகோ
Source : whats app
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடக்கிறது ஆனால் உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில் விகிதம் குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
இரு மொழிக்கொள்கை தான் வேண்டும்
மதுரையில் கட்சி நிர்வாகிகள் இல்லத்திற்கு சென்ற மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பி.,யுமான துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்..,” அண்ணாமலை மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். பாஜகவை தவிர அனைத்து இயக்கங்களும் தமிழ்நாட்டுக்கு இரு மொழி கொள்கைதான் தேவை என்று சொல்கிறார்கள். இருமொழிக் கொள்கையால் தான் கல்வி வளர்ச்சியில் உயர்ந்து இருக்கிறோம். இன்று உறுதியாக இருக்கிறோம்.
ஆங்கிலத்தை படிப்படியாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்:
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக தலைவர்கள் வைக்கின்ற கோரிக்கை ஆங்கிலம் தேவையில்லை, ஆங்கிலம் இருக்கவே கூடாது என்று பரப்புரை நிகழ்த்துகிறார்கள். இந்த நாட்டில் ஆங்கிலமே இருக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆங்கிலம் இருப்பதால்தான் தமிழக இளைஞர்கள் வாழ்க்கையில் உயர்ந்து இருக்கிறார்கள். பல துறைகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவது ஆங்கில புலமையால் தான். நூற்றுக்கணக்கான இந்தியர்களை கைவிலங்கு போட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை, வட இந்தியர்கள். தமிழகம் பள்ளிக் கல்வியில் இருந்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய விகிதம் 50 சதவீதமாக உள்ளது. பாஜக மறைமுகமாக ஆங்கிலத்தை படிப்படியாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மொழியை வைத்து அரசியல் செய்வது பாஜக மட்டுமே:
மாணவர்கள் தற்போது பல மன சுமைகளை இருக்கிறார்கள். மாணவர்கள் விருப்பப்பட்டு என்ன வேண்டுமானாலும் படிக்கலாம். இந்தியை திணிக்கவில்லை மூன்றாவது மொழி எந்த மொழியாக வேணாலும் இருக்கலாம் என்று ஆளும் பாஜக சொல்கிறது. மாணவர்கள் மூன்றாவது முறையை கட்டாயம் எடுத்து படிக்க வேண்டும் அது இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று பாஜக சொல்கிறார்கள். மாணவர்கள் மூன்றாவது மொழியாக உலக மொழியை கற்றுக் கொண்டால் என்ன? மும்மொழிக் கொள்கை இருக்கட்டும் அது ஏன் இந்திய மொழியை திணிக்கிறீர்கள். மொழியை வைத்து அரசியல் செய்வது பாஜக மட்டுமே. என்று இந்தியை திணிக்கிறீர்களோ? நாங்கள் அதை எதிர்க்கிறோம் அரசியல் ஆக்கவில்லை. மத்திய பாஜக அரசு கல்விக்கு நிதி கொடுக்காமல் இருப்பதால் தமிழக பள்ளிக்கல்வித்துறை நிதிச் சுமையில் இருக்கிறது. ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி வரவில்லை.
மாற்றம் மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்:
புயல் நிவாரண நிதிகள் தமிழகத்திற்கு மிகவும் குறைவாக வந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக பாலியல் வன்கொடுமை நடத்தக்கூடிய மாநிலம் உத்தர பிரதேசம். ஒன்றிய அரசு ஸ்தாபனம் இதை தெரிவித்திருக்கிறது.
டெல்லியில் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஒன்றிய அரசாங்கம் கையில் தான் உள்ளது. டெல்லி தலைநகரில் பல பிரச்னைகள் உள்ளது. குண்டு வெடிப்பு துப்பாக்கி சூடு நடக்கிறது. தமிழகத்தில் பாலிய வன்கொடுமை வழக்குகள் நடக்கிறது. ஆனால் விகிதம் குறைவாக இருக்கிறது. என்னதான் சட்டங்களை மாற்றினாலும் கூடுதல் சட்டங்களை கொண்டு வந்தாலும் மாற்றம் மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நான் அரசியலில் கத்துக்குட்டி, எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது. விபத்தால் அரசியலுக்கு வந்தவன், நான் விரும்பி வரவில்லை எனது கட்சியை நிர்வாகிகளும் தொண்டர்களும் என்னை இழுத்து வந்தார்கள். சக்திக்கு மீறி என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















