மேலும் அறிய

பாரதிதாசன் பல்கலை. ஆசிரியர் பதவி உயர்வு; சிலருக்கு மட்டும் பாரபட்சமா? அன்புமணி கேள்வி

34 பேரும் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் என்பதால் அவர்களுக்கு  பேராசிரியர்  நிலை வரை பதவி உயர்வு வழங்கப்படுவதை பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்- அன்புமணி.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர் பதவி உயர்வில் சமூக அநீதியைப் போக்க வேண்டும் என்று பா.ம.க.  தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி பல்கலைக்கழகப் பணிக்கு மாற்றப்பட்ட   ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பணிக்கான பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. இந்த சமூக அநீதி கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு பேராசிரியர், மூத்த பேராசிரியர் நிலை வரையிலும், கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு இணைப் பேராசிரியர் வரையிலும் பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவற்றுக்கு பல ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2019ஆம் ஆண்டில் உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன.

அப்போது பல்கலைக்கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி 34 ஆசிரியர்கள் மீண்டும்  பல்கலைக்கழகத்திற்கு அழைத்துக் கொள்ளப்பட்டார்கள். இப்போது பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் திரும்பி விட்ட அவர்களுக்கு பேராசிரியர் நிலை வரை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், அவர்களை ஏற்கனவே இருந்த கல்லூரி ஆசிரியர்களாகவே கருதி அவர்களுக்கு இணைப் பேராசிரியர் நிலை வரை மட்டும்தான் பதவி உயர்வு வழங்கப்படும்  என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது. இது தவறு மட்டுமின்றி, சமூக அநீதியும் ஆகும். அவர்கள் 34 பேரும் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் என்பதால் அவர்களுக்கு  பேராசிரியர்  நிலை வரை பதவி உயர்வு வழங்கப்படுவதை பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Heatwave Orange Alert : வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! இந்த 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை
வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! இந்த 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget