Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்தார் என சொல்லி முடிப்பதற்குள் அடுத்த வீரராக ஏலத்திற்கு வந்த ரிஷப் பண்ட், 10 நிமிடத்தில் அந்த சாதனையை முறியடித்தார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பண்ட். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை 27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் 2025ம் ஆண்டு சீசனில் ஒவ்வொரு அணி சார்பிலும் களமிறங்க உள்ள வீரர்களுக்கான, மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இந்த ஏலம் இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.
ரிஷப் பண்ட் படைத்த சாதனை:
இன்றைய ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தனர். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்தார் என சொல்லி முடிப்பதற்குள் அடுத்த வீரராக ஏலத்திற்கு வந்த ரிஷப் பண்ட், 10 நிமிடத்தில் அந்த சாதனையை முறியடித்தார்.
கடும் போட்டிக்கு மத்தியில் லக்னோ அணி அவரை, 27 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இதன் மூலம், 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட்-ஐ வாங்க பெரும்பாலான அணிகள் போட்டி போட்டன.
போட்டா போட்டி போட்ட அணிகள்:
பெங்களூரு, ஹைதராபாத், பஞ்சாப் உள்ளிட்ட அணிகள், அவரை ஏலத்தில் கேட்டனர். கடைசியாக, லக்னோ, டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடந்தது. இறுதியில், 27 கோடி ரூபாய்க்கு பண்ட்-ஐ லக்னோ அணி வாங்கியது.
முன்னதாக, ஏலத்தில் முதல் வீரராக சென்ற அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி 18 கோடி ரூபாய்க்கு எடுத்தது. சாஹலை 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியும் டேவிட் மில்லரை ரூ.7.5 கோடி லக்னோ அணியும் வாங்கியது.
முகமது ஷமியை 10 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியும் மிட்செல் ஸ்டார்கை 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணியும் வாங்கியது. ஜாஸ் பட்லரை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் அணி.
இதையும் படிக்க: IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?