IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: ஐபிஎல் 2025 சீசன் வீரர்களுக்கான மெகா ஏலம் இன்று தொடங்குகிறது.
IPL Mega Auction 2025: ஐபிஎல் 2025 சீசன் வீரர்களுக்கான மெகா ஏலம் இன்று தொடங்கி, சவுதி அரேபியாவில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன.
ஐபிஎல் 2025 மெகா ஏலம்:
ஐபிஎல் 2025ம் ஆண்டு சீசனில் ஒவ்வொரு அணி சார்பிலும் களமிறங்க உள்ள வீரர்களுக்கான, மெகா ஏலம் இன்று தொடங்குகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இரண்டு நாட்கள் இந்த ஏலம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெளியே ஏலம் நடப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த மெகா ஏலம் அனைத்து பத்து உரிமையாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது மற்றும் இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.
நட்சத்திர வீரர்கள்:
ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், அர்ஷ்தீப் சிங் மற்றும் பல இந்திய நட்சத்திர வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பெரிய இந்தியப் பெயர்களைத் தவிர, வெளிநாட்டு நட்சத்திரங்களான ஜோஸ் பட்லர், ககிசோ ரபாடா, மிட்செல் ஸ்டார்க், லியாம் லிவிங்ஸ்டோன், ட்ரெண்ட் போல்ட் மற்றும் பலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
ஐபிஎல் 2025 மெகா ஏல தேதி மற்றும் நேரம் (IPL Auction 2025 Time)
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களும் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கும்.
ஐபிஎல் 2025 மெகா ஏலம்: மொத்த வீரர்களின் எண்ணிக்கை
இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் மொத்தம் 577 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அடங்குவர். 10 அணிகளில் மொத்தமாக 204 நிரப்பப்பட உள்ளன. இதில் 70 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலம் ஜியோசினிமா செயலியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதை தொலைக்காட்சியில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை தொடரலாம்.
அணிகள் கைவசம் உள்ள தொகை
ஐபிஎல் 2025 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் 110.5 கோடியுடன் அதிக தொகையை கைவசம் கொண்டுள்ளது. அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் குறைந்தபட்சமாக 41 கோடி ரூபாயை கைவசம் கொண்டுள்ளது.
- பஞ்சாப் : ரூ.110.5 கோடி
- பெங்களூர்: ரூ. 83 கோடி
- டெல்லி : ரூ.73 கோடி
- லக்னோ : ரூ. 69 கோடி
- குஜராத் : ரூ. 69 கோடி
- சென்னை : ரூ.55 கோடி
- கொல்கத்தா: ரூ. 51 கோடி
- மும்பை:ரூ. 45 கோடி
- ஐதராபாத்: ரூ.45 கோடி
- ராஜஸ்தான்: ரூ.41 கோடி
ஏலத்திற்கு முன் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்எஸ் தோனி
டெல்லி கேபிடல்ஸ்: அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல்
குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான், சுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் திவேதியா மற்றும் ஷாருக் கான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரிங்கு சிங், வருண் சகரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா மற்றும் ரமன்தீப் சிங்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான் மற்றும் ஆயுஷ் படோனி
மும்பை இந்தியன்ஸ்: ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா
பஞ்சாப் கிங்ஸ்: ஷஷாங்க் சிங் மற்றும் பிரப்சிம்ரன் சிங்
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர் மற்றும் சந்தீப் சர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் மற்றும் டிராவிஸ் ஹெட்