மேலும் அறிய
’வீர தீர சூரன்’ வெளியாகாததால் சோகத்தில் சீயான் விக்ரம் ரசிகர்கள்
விஜய், அஜித் திரைப்பட வெளியீட்டின் போது இப்படி செய்வீர்களா? ஒரு நல்ல நடிகனின் ரசிகர்களுக்கு இதான் நிலைமையா ? காவல்துறையினரிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்திய விக்ரம் ரசிகர்கள்.

வீர தீர சூரன்
Source : whats app
வீர தீர சூரன் திரைப்படம்
நடிகர் விக்ரம் நடிப்பில் சித்தா படத்தின் இயக்குநர் சு.அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் சித்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று படம் உலகம் முழுவதும் காலை 9 மணிக்கு வெளியாக இருந்தது. ஆனால் திடீரென நேற்று இரவு திரைப்படத்தை வெளியிடுவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு திரையிட இருந்த முதல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.
ரசிகர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது
மதுரையை பொருத்தமட்டில் படம் 15 க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாக இருந்தது. திரையரங்கில் பதாகைகள் வைத்து படத்தை கொண்டாட இருந்த விக்ரம் ரசிகர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை அரசரடி பகுதியில் உள்ள சோலைமலை திரையரங்கில் விக்ரம் ரசிகர்கள் திரைப்படத்தின் முதல் நாள் காட்சி காண கொண்டாட்டங்களில் ஈடுபடட குவிந்தனர். முன்னதாக மதுரை பெரியார் பகுதியில் இருந்து அரசரடி வரை இருசக்கரம் மற்றும் ஆட்டோ வில் பேரணியாக ஒலி எழுப்பி வந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்த ரசிகர்களால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்
அவர்களை பின் தொடர்ந்து வந்த காவல்துறையினர் விக்ரம் ரசிகர்களின் இருசக்கர வாகனத்தை கைப்பற்ற முயற்சித்து எச்சரிக்கை விடுத்தனர். அப்போது காவல்துறையிடம் சில விக்ரம் ரசிகர்கள் சார் அவர்கள் செய்ததற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுகிறோம். நாங்கள் ஒரு நல்ல நடிகரையும் மனிதரையும் கொண்டாடுவதற்காக இங்கு கூடியுள்ளோம் விஜய் அஜித் படத்திற்கு இது போன்ற தடைகள் வருமா? விஜய் அஜித் ரசிகர்களை இதுபோல செய்வீர்களா? நாங்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் திரையரங்கிற்குள்ளே எங்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம் ... படம் வேறு வரவில்லை வருமா வராதா என்ற கவலையில் இருக்கிறோம் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சோகமாக வெளியேறிய ரசிகர்கள்
அதற்கு காவல்துறையினர் திரையரங்க வளாகத்திற்குள் உங்கள் கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளுங்கள், போக்குவரத்துக்கு இடையூறு செய்த உங்களது சக ரசிகர்களை நீங்கள் தான் கண்டிக்க வேண்டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எக்காரணம் கொண்டு இடையில் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கினர். ஏற்கனவே படம் வராததால் விரக்தியில் உள்ள விக்ரம் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொண்ட காவல்துறையினர் அவர்களின் வாகனங்களை கைப்பற்றாமல் அறிவுரை வழங்கினர். திரையரங்கம் சார்பில் மதியத்திற்கு மேல் தான் படம் வெளியாகும் என ரசிகர்களிடம் கூறியதை தொடர்ந்து ரசிகர்கள் சோகமாக திரையரங்கங்களை சுற்றி உள்ள பகுதியில் சோகமாக அங்கங்கே நின்று கொண்டிருக்கின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் - கச்சக்குடா ரயில் சேவை நீட்டிப்பு
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















