மேலும் அறிய

Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ

Pongal 2025 Kappu Kattu: தமிழர் திருநாள் தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டுதலின் சிறப்புகள் என்னென்ன? எதற்கு ”காப்பு கட்டுதல்” திருவிழாவாக கொண்டாடப்பட்டது?

Kappu Kattu: முன்பிருந்த காலங்கள் முதல் தற்போது வரை பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் காப்புக்கட்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த காப்புக்கட்டு திருவிழாதான் இப்போ ”போகி” பண்டிகையா மாறி இருக்குறத நாம பார்க்க முடியும். பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் இன்றைய தினம் போகிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து காப்புக்கட்டுவார்கள்.

காப்பு கட்ட நல்ல நேரம் | Kappu Kattu Nalla Neram 2025

மாலை 6 மணிக்கு மேல் காப்பு கட்டுவதற்கு ஏற்ற நேரம். சிலர் பொங்கல் நாளில் காலையில் காப்பு கட்டுவார்கள்.

எதுக்கு காப்புக்கட்டு? என்ன காரணம்?

இந்த காப்புக்கட்டு நாள் அன்று என்ன விசேஷம் அப்படின்னு பாக்குறதுக்கு முன்னாடி பொதுவா பொங்கல் பண்டிகை  கொண்டாடப்படுவது நம் மண்ணுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கிற ஒரு திருநாளாக இந்த தைப்பொங்கல் பண்டிகைய அதுவும் குறிப்பா தமிழர்கள் மட்டுமே கொண்டாடக்கூடிய ஒரு திருநாளாக இருந்துவருகிறது . இந்த பொங்கல் திரு நாளுக்கு முன் நாள் ”காப்புக்கட்டு” இந்த நிகழ்வு பாரம்பரியமாக தொன்றுதொட்டு வந்த நிலையில், தற்போது காலநிலை மற்றும் கலாச்சாரங்கள் மாற்றத்தினால் பெரிதும் இதைப் பற்றிய வரலாறு தெரியாமலே இருப்பதையும்  நாம பார்க்க முடியும். 

Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ

”பொங்கல் கொண்டாடும் இந்த நாளுக்கு, முன் மாதங்கள்ள மழையின் அளவு அதிகமாக இருந்தும்  பொங்கல் தொடங்கின நாள் அன்றைக்கு மழைக்காலம் தணிந்திருக்குமாம். இதுல குளிர்காலம் ஒரு பகுதியில் இருக்குமாம். இந்த இரண்டும் சேரும் போது உடலில் அதிக உஷ்ணம் சக்திகள் மாறிமாறி வெளியேறி  பெரியம்மை , காலரா போன்ற தொற்று நோய்கள்  உருவாகி இருந்த காலகட்டங்களும் இருந்ததா சொல்லப்படுது.

மழை பெய்யுற நாட்கள்ல ஏற்படும் மூட்டைப்பூச்சிகளின் தொல்லை காரணமாவும், விஷப்பூச்சிகள் போன்றதுலருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பான்களாகப் பயன்படும் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபிள்ளை, தும்பை, பிரண்டை, துளசி கொண்டு கட்டி வீட்டின் முகப்புகள்லயும் தெருக்கள்லயும் தோரணங்களா தொங்கவிடுவாங்க, இதனால் நோய் தாக்கும் பூச்சிகள் வராதுங்கற உண்மையும் இருக்கு.

தை மாத அறுவடை முடிஞ்சு விளைபொருள்கள் வீடு வந்த பின்னாடிதான் கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை. அப்படி வீட்டுக்கு வரும் விளைபொருட்கள்தான் ஒரு வருஷத்துக்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருந்திருக்கு. வீட்ல இருக்க விளைபொருள் கெட்டுப் போகாம பத்திரம இருந்து அந்த வீட்டுக்குப் பயன்படனும் என்பதுக்காகதான் வீட்டுகள்ள காப்பு கட்டுவதாகவும் சொல்றாங்க தமிழாய்வாளர்கள். ‘விளை நிலங்களும் அதுல விவசாயிகளுடன் சேர்ந்து வேலை செய்யும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் கூட பாதுகாப்பா இருக்க வேணும்குற பரந்த சிந்தனையில்தான் நிலங்களையும் கால் நடை தொழுவங்களையும்கூட இதில் சேர்த்துருக்காங்க நம் முன்னோர்கள்.

Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ

பொங்கல் காப்பு பத்தி அகத்திணை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள்ளயே சொல்லப்பட்டிருக்கு. ‘விவசாயிக்கும் விவசாயத்துக்கும் பாதுகாப்பு’ன்னு இதைச் சொல்லிக்கலாம். இந்தப் பழக்கமும், இதுக்குச் சொல்லப்படுற காரணமும் ஒவ்வொரு பகுதியைப் பொறுத்தும் சின்னதா வேறுபடலாம். பிழைப்புக்காக நகர்ப்புறங்களுக்குப் போனவங்ககூட எப்பாடுபட்டாவது பொங்கலுக்கு சொந்த ஊர் வந்துடறாங்க. வசிக்கும் ஊரில் பொங்கல் கொண்டாடுவதை விட, சொந்த ஊரில் இருக்கும் வீடு, நிலங்களுக்குக் காப்புக் கட்டுவதை முக்கியமானதாகக் கருதுகிறவர்களும் இருக்காங்க” என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். இது போன்று நாம் கொண்டாடப்படும் ஒவ்வொரு விழாக்களுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருந்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget