Asian Champions Trophy 2023: களமிறங்கிய 18 பேர்.. ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபியை ஆட்டிப்படைக்க போகும் இந்திய வீரர்கள் இவர்கள்தான்!
ஏஸ் டிராக்ஃப்ளிக்கர் மற்றும் டிஃபென்டர் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் இந்திய அணி, ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை ஹீரோ ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா நேற்று அறிவித்தது. அதன்படி, ஏஸ் டிராக்ஃப்ளிக்கர் மற்றும் டிஃபென்டர் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் இந்திய அணி களமிறங்கும் என்றும், மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங் துணை கேப்டனாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி:
கோல்கீப்பர்கள்
1. பிஆர் ஸ்ரீஜேஷ்
2. கிரிஷன் பகதூர் பதக்
டிஃபெண்டர்ஸ்
3. ஜர்மன்பிரீத் சிங்
4. சுமித்
5. ஜுக்ராஜ் சிங்
6. ஹர்மன்பிரீத் சிங் (சி)
7. வருண் குமார்
8. அமித் ரோஹிதாஸ்
மிட்ஃபீல்டர்ஸ்
9. ஹர்திக் சிங் (விசி)
10. விவேக் சாகர் பிரசாத்
11. மன்பிரீத் சிங்
12. பாடிய சர்மா
13. ஷம்ஷேர் சிங்
ஃபார்வர்டு
14. ஆகாஷ்தீப் சிங்
15. மந்தீப் சிங்
16. குர்ஜந்த் சிங்
17. சுக்ஜீத் சிங்
18. எஸ் கார்த்தி
இந்திய அணி போட்டி விவரம்:
இந்த ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி ஆகஸ்ட் 3ஆம் தேதி சீனாவுக்கு எதிராக தனது முதல் லீக் போட்டியில் களமிறங்குகிறது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 4ஆம் தேதி ஜப்பானுடனும், 6ஆம் தேதி மலேசியாவுடனும், அதன் பிறகு கொரியாவுடனும் இந்திய அணி மோதுகிறது.
அணித் தேர்வு குறித்து தலைமைப் பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டன் பேசுகையில், "2023-ம் ஆண்டுக்கான ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சென்னையைப் பற்றி சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட ஒரு அணியை நாங்கள் கவனமாக தேர்வு செய்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் நடைபெறவிருக்கும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ஆடவர் அணி இளைஞர்கள் மற்றும் அனுபவங்களின் கலவையைக் கொண்டுள்ளது. ஸ்பெயினில் 100வது ஆண்டு ஸ்பானிய ஹாக்கி கூட்டமைப்பு-சர்வதேச போட்டியை நாளை தொடங்குவது அணிக்கு உற்சாகமானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
ஹாக்கி போட்டியை நேரலையில் காண்பது எப்படி..?
ஹீரோ ஆண்கள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சென்னை 2023 போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஃபேன்கோடில் நேரலையாக பார்க்கலாம். மற்ற நாடுகளில் இருந்து பார்பவர்கள் watch.hockey இல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
டிக்கெட் வாங்குவது எப்படி..?
ஹீரோ ஆண்கள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி சென்னை 2023க்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் https://in.ticketgenie.in/T ickets/Hero-Asian-Champions- Trophy-2023 இல் கிடைக்கின்றன.