மேலும் அறிய

WPL 2023: நாளை தொடங்குகிறது மகளிர் ஐபிஎல்.. கேப்டன்களாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்!

மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளில் கேப்டன்கள் யார் யார் என்ற முழு பட்டியலையும் கீழே பார்க்கலாம். 

முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 தொடரானது மும்பையில் நாளை முதல் தொடங்கி வருகிற மார்ச் 26ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. நாளைய தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்த 5 அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. 

இந்தநிலையில், மார்ச் 1 ம் தேதியான நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணி தனது கேப்டன் யார் என்பது குறித்த அறிவிப்பை கடைசி அணியாக வெளியிட்டது. அதில், உலகக் கோப்பையை வென்று தந்த ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங்கே கேப்டனாகவே செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த அணியின் துணை கேப்டனாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அறிவிக்கப்பட்டார். 

இந்த சூழலில், மகளிர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளில் கேப்டன்கள் யார் யார் என்ற முழு பட்டியலையும் கீழே பார்க்கலாம். 

மும்பை இந்தியன்ஸ் - ஹர்மன்பிரீத் கவுர்

மும்பை அணிக்கு எப்படி ரோகித் சர்மாவோ, அதேபோல் மகளிர் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் திகழுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு தொடக்கம் முதல் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கவுர், 37.83 சராசரியில் இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும், இவரது தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்றது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் - மெக் லானிங்

மெக் லானிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 4 முறை டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 100 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளது. மொத்தம் 132 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மெக் லானிங், 2 சதம், 15 அரைசதம் உள்பட 3,405 ரன்கள் எடுத்துள்ளார். 

குஜராத் டைட்டன்ஸ் - பெத் மூனி 

கடந்த ஏலத்தின்போது ஆஸ்திரேலிய அணிக்காக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 74 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருது பெற்றார். 29 வயதான இவர், இதுவரை 83 டி20 போட்டிகளில் விளையாடி 2 சதம், 18 அரைசதம் உள்பட 2350 ரன்கள் எடுத்துள்ளார். வெளிநாட்டி நடைபெறும் லீக் தொடரின் அணியின் கேப்டனாக செயல்படுவது பெத் மூனிக்கு இதுவே முதல்முறை. 

உபி வார்யர்ஸ் - அலிசா ஹீலி

 5 முறை ஆஸ்திரேலியா அணி டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்த 32 வயதான அலிசா ஹீலி, யாரும் எதிர்பார்க்காத வேளையில் உபி வார்யர்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுவரை 139 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹீலி, ஒரு சத, 14 அரைசதம் உள்பட 2,446 ரன்கள் எடுத்துள்ளார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ஸ்மிருதி மந்தனா

 இதுவரை இந்தியாவுக்காக பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 77 ஒருநாள், 112 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 5 சதங்கள், 25 அரை சதங்கள் உட்பட  3073 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டியில் ஸ்மிருதி  2651 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மிருதி 325 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்மிருதி டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

நடைபெறும் முதலாவது ஐபிஎல் தொடரில் 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 5 அணிகளில் மூன்று அணிகளின் கேப்டன்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள இரண்டு அணிகளுக்கு இந்திய வீராங்கனைகள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

அணிகள் கேப்டன் தலைமை பயிற்சியாளர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஸ்மிருதி மந்தனா பென் சாயர்
மும்பை இந்தியன்ஸ் ஹர்மன்ப்ரீத் கவுர் சார்லோட் எட்வர்ட்ஸ்
டெல்லி தலைநகரங்கள் மெக் லானிங் ஜொனாதன் பாட்டி
UP வாரியர்ஸ் அலிசா ஹீலி ஜான் லூயிஸ்
குஜராத் ஜெயண்ட்ஸ் பெத் மூனி ரேச்சல் ஹெய்ன்ஸ்

அணியின் துணை கேப்டன்கள் பட்டியல்:

  • மும்பை இந்தியன்ஸ் - அறிவிப்பு இல்லை
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அறிவிப்பு இல்லை
  • டெல்லி கேபிட்டல்ஸ் - ஜெமிமா ரோட்ரிக்ஸ்
  • குஜராத் ஜெயண்ட்ஸ்- சினே ராணா 
  • UP வாரியர்ஸ் - தீப்தி சர்மா
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget