Virat Kohli with Daughter: அப்பாவின் தேவதை... தோல்வி கவலை மறந்து மகள் வாமிகாவுடன் சில் அவுட் செய்யும் விராட் கோலி!
விராட் கோலி பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படம் ஆர்சிபி ரசிகர்களையும் விராட் - அனுஷ்கா ரசிகர்களையும் மகிழ்வித்து இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது
பிஸியான ஐபிஎல் தொடருக்கு இடையே தன் மகள் வாமிகாவுடன் நீச்சல் குளத்தில் சில் அவுட் செய்யும் புகைப்படத்தை விராட் கோலி பகிர்ந்துள்ளார்.
ஆர்சிபி தோல்வி.. கோலி மீதான விமர்சனம்
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 215 ரன்களைக் குவித்தும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் வரலாற்றில் 46ஆவது அரை சதத்தை விராட் கோலி பதிவு செய்த நிலையில், அவரது அரை சதம் வீணானது. எனினும் அரை சதம் எடுக்க விராட் கோலி அதிரடியாக விளையாடாமல், 19 ரன்களை எடுக்க 19 பந்துகளை எதிர்கொண்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் விராட் கோலி அரை சதம் என்ற தனிப்பட்ட சாதனையை மனதில் வைத்தே விளையாடியதாகவும், அதிரடியாக விளையாடவில்லை என்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் சைமன் டூலி கடுமையாக விமர்சித்திருந்தார்.
மகளுடன் சில் அவுட்
இந்நிலையில், நேற்றைய போட்டி குறித்த கவலை மற்றும் விமர்சனங்களை மறந்து விராட் கோலி முன்னதாக தன் மகள் வாமிகாவுடன் நீச்சல் குளத்தில் சில் அவுட் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
— Virat Kohli (@imVkohli) April 11, 2023
விராட் கோலி பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படம் ஆர்சிபி ரசிகர்களையும் விராட் - அனுஷ்கா ரசிகர்களையும் மகிழ்வித்து இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. காதல் பறவைகளாக வலம் வந்த விராட் - அனுஷ்கா ஜோடியின் காதலின் பரிசாக பிறந்த குழந்தை வாமிகா.
விராட் - அனுஷ்கா
பாலிவுட் முதல் கிரிக்கெட் உலகம் வரை ரசித்துக் கொண்டாடும் விராட் - அனுஷ்கா ஜோடி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் நடுவே அனுஷ்கா கருவுற்றிருப்பதை விராட் - அனுஷ்கா தம்பதி அறிவித்த நிலையில், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
தங்கள் குழந்தைக்கு வாமிகா எனப் பெயர் சூட்டிய விராட் - அனுஷ்கா தம்பதி தொடர்ந்து தங்கள் குழந்தையை மீடியா வெளிச்சத்தில் இருந்து பாதுகாத்தே வளர்த்து வருகின்றனர்.
இணையத்தில் தங்கள் குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்தாலும் அவரது முகம் தெரியாத புகைப்படங்களையே பகிர்ந்து வருகின்றனர். மேலும் ஊடகங்கள், சமூக ஊடகங்களில் இருந்து விலகி தங்கள் குழந்தை சுதந்திரமாக வாழ தங்களால் முடிந்தவற்றை செய்து வருவதாக இருவருமே தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Jason Roy: ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் இனி இவர்தான்..! இங்கிலாந்தின் அதிரடி மன்னனை தட்டித் தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..!