PAK vs SL Asia Cup Final LIVE:6 பந்துகளில் 32 ரன்கள் தேவை...! வெற்றியின் விளிம்பில் இலங்கை..!
PAK vs SL Asia Cup Final LIVE: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE

Background
6 பந்துகளில் 32 ரன்கள் தேவை...! வெற்றியின் விளிம்பில் இலங்கை..!
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தான் கைவசம் 1 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது.
ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்..! இலங்கை வெல்லுமா..?
ஹசரங்கா வீசிய 17வது ஓவரில் மட்டும் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோல்டன் டக் அவுட்டாகிய ஆசிப் அலி..!
பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆசிப் அலி இலங்கையின் ஹசரங்கா பந்தில் முதல் பந்திலே கோல்டன் டக் அவுட்டாகி வெளிேயேறினார்.
முகமது ரிஸ்வான் அவுட்..! வெற்றி பெறப்போவது யார்.?
பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முகமது ரிஸ்வான் முக்கியமான கட்டத்தில் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
முகமது ரிஸ்வான் அதிரடி அரைசதம்..!
பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அரைசதம் விளாசியுள்ளார். அவர் களத்தில் இருப்பதால் பாகிஸ்தான் அணி நம்பிக்கையுடன் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

