IPL 2025 DC vs LSG: வெற்றி யாருக்கு? பேட்டிங்கில் மிரட்டுமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி அணி!
IPL 2025 DC vs LSG: டெல்லி - லக்னோ அணிகளுக்கான இடையேயான போட்டி தொடங்கியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்றால் அது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களை சொல்லிவிடலாம். 10 அணிகள், 74 போட்டிகள் என சுவாரஸ்யமான தருணங்களுடன் காத்திருக்கிறது தொடர்.
4-வது லீக் போட்டி:
இந்தத் தொடரின் 4-வது லீக் போட்டி, ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது.
டாஸ் வென்ற அக்ஷார் படேல் தெரிவிக்கையில், “ நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம். ரில்ஸ் எடுத்த விரும்பவில்லை. அதான் இந்த முடிவு. ரிசப்க்கு என்னை அறிவார். எங்களின் டிரிக்ஸ் பற்றி இருவரும் அறிவோம். ” எனத் தெரிவித்தார்.
டெல்லி கேப்பிடள்ஸ் ப்ளேயிங் லெவன்:
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாப் டுப்ளசிஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்,சமீர் ரிஸ்வி,விப்ராஜ் நிகம், மிட்சல் ஸ்டாக், குல்தீப் யாதவ், மோஹித் ஷர்மா, முகேஷ் குமார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ப்ளேயிங் லெவன்:
எய்டன் மார்க்ரம்,மிட்சல் மார்ஷ், ரிஷ்ப பண்ட், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், ஆய்ஷ் போதானி, ஷாபாஸ் அகமது,ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், திக்வேஷ் சிங்
டெல்லி கேப்பிடள்ஸ் அணி - கே.எல். ராகுல் இல்லை:
டெல்லி கேப்பிடள்ஸ் அணியில் கே.எல். ராகுல் போட்டியில் விளையாடவிலை. ACA-VDCA மைதானத்தில் நடைபெறும் டெல்லியின் முதல் போட்டியில் கே.எல். ராகுல் விளையாடவில்லை. என்ன காரணம் என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. அக்சார் படேலும் அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

