"அவரு OBC-யே கிடையாது" மோடி குறித்து ரேவந்த் ரெட்டி பரபர கருத்து!
தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்று பிரதமர் மோடி கூறிக் கொள்கிறார். ஆனால், பிறப்பால் அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, பிறப்பால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அல்ல என்றும் அவர் பிறந்த சாதி, பின்னர்தான், OBC பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
மோடியின் சாதி குறித்து சர்ச்சை:
பிரதமர் மோடியின் சாதி குறித்து அவ்வப்போது சர்ச்சை வெடிப்பது வழக்கம். இந்த நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரும் தெலங்கானா முதலமைச்சர்களில் ஒருவருமான ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியின் சாதி குறித்து பேசிய கருத்துகள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
கடந்த 2001 ஆம் ஆண்டு, மாநிலத்தின் முதலமைச்சராக மோடி பொறுப்பேற்ற பிறகு, குஜராத் அரசால் மோடியின் சாதி பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய ரேவந்த் ரெட்டி, "தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்று பிரதமர் மோடி கூறிக் கொள்கிறார். ஆனால், பிறப்பால் அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சட்டப்பூர்வமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்.
ரேவந்த் ரெட்டி பேசியது என்ன?
நான் எனது வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து பேசுகிறேன். 2001 இல் அவர் முதலமைச்சராகும் வரை, அவர் முன்னேறிய சாதியினரில் ஒருவராக இருந்தார். அவர் முதலமைச்சரான பிறகு, ஒரு சட்டத்தை இயற்றி தனது சாதியின் வகையை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்தார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக பிரதமர் பதவியில் இருக்கிறேன். அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக சாதிச் சான்றிதழை வைத்திருக்கலாம். ஆனால், அவரது மனநிலை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக உள்ளது" என்றார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கருத்துக்கு பதிலடி அளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. சிங், "அவர் எந்த வேலையும் செய்வதில்லை. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசி தலைப்புச் செய்திகளில் இருப்பதை விரும்புகிறார்" என்றார்.
(முன்னாள் முதல்வர்) கே. சந்திரசேகர ராவ் 'பீகாரி மரபணுவை' கொண்டவர் என்றும், இதன் மூலம் பீகார் முழுவதையும் அவமதிப்பதாகவும் அவர் முன்பு கூறியிருந்தார். அனைத்து உண்மைகளையும் கண்டறிந்த பின்னரே அவர் பேச வேண்டும் என ஆர்.பி. சிங் விமர்சித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

