மேலும் அறிய

PAK vs AUS, Match Highlights: பாகிஸ்தான் ஏமாற்றம் ; இறுதிப்போட்டியில் நியூசி.,யை சந்திக்க ஆஸி., ரெடி

நவம்பர் 14-ம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

டி-20 உலக்கோப்பை தொடரின் அரை இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றது. நேற்று நடந்த முதல் அரை இறுதிப்போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது நியூசிலாந்து. இந்நிலையில், இன்று துபாயில் நடந்த இரண்டாது அரை இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் களமிறங்கிய பாகிஸ்தான் 176 ரன்கள் எடுக்க, 177 ரன்களை சேஸ் செய்து ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ஷாயின் அஃப்ரிதி வீசிய பந்தில் ஃபின்ச் டக்-அவுட்டாகி வெளியேறினார். அதனை தொடர்ந்து 7,9,11,13 என ஓவர்களில் விக்கெட்டுகள் சரிந்தன. ஓப்பனர் வார்னர் நிதானமாக தொடங்கி 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற பேட்டர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், ஸ்டாய்னிஸ் (40*) கடைசி வரை களத்தில் நின்றார். இவரோடு கூட்டணி சேர்ந்த வாடே, போட்டியின் முக்கியமான கட்டத்தில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என வெறும் 17 பந்துகளில் 41* ரன்கள் எடுத்து அவரும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது ஆஸ்திரேலியா.

கடந்த 50 ஓவர் உலகக்கோப்பை போன்றே இதுவரை டி-20 உலகக்கோப்பையை வெல்லாத ஓர் புதிய அணி இம்முறை சாம்பியன் ஆக உள்ளது. நவம்பர் 14-ம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

முதல் இன்னிங்ஸ் ரீவைண்ட்:

பேட்டிங் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு வழக்கம் போல பாபர் அசாமும், ரிஸ்வானும் முதல் பேட்டிங் ஆடினர். 10 ஓவர்கள் வரை களத்தில் நின்ற இந்த இணை 70+ ரன்கள் சேர்த்தது. 10வது ஓவரின்போது ஜம்பா வீசிய பந்தில்தான் கேட்ச் கொடுத்து பாபர் அசாம் அவுட்டாகினார். அவரை அடுத்து ஃபகர் ஜமான் களமிறங்கினார். மீண்டும் ஜோடி சேர்ந்து ஆடியது ரிஸ்வான் - ஜமான் இணை. 18 ஓவர்கள் வரை இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்த இணை அணியின் ஸ்கோரை 140+க்கு எடுத்துச் சென்றனர். 

4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஸ்வான் அவுட்டாகினார்.அவரை அடுத்து களமிறங்கிய ஆசிஃப் அலி (0), சோயப் மாலிக்கும் (1) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஆஸ்திரேலியாவை பொருத்தவரை ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளும், கம்மின்ஸ், ஜம்பா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் 176 ரன்கள் எடுத்துள்ளது. 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Trump Vs Zelensky: “ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
“ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Embed widget