ICC player of Month Nominees: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்.. ஐ.சி.சி. விருதை வெல்வாரா ஜடேஜா..?
இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி ஆகியோர் இன்று பிப்ரவரி 2023 மாதத்திற்கான ICC சிறந்த வீரர் விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
விருதுபட்டியலில் ஜடேஜா:
இந்திய அணியின் ஜடேஜா முதல் முறையாக தேர்வுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மிகச்சிறந்த பந்து வீச்சினால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ப்ரூக் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார், மேலும் கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது சிறப்பாக விளையாடி டிசம்பர் மாதத்திலும் இது போன்று ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டார்.
ஐ.சி.சி.யின் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர்களுக்கான வரிசையில் இறுதியில் உள்ள பெயர், மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் மோட்டி, ஜிம்பாப்வேயில் நடந்த டெஸ்ட் தொடரின் போது சிறப்பாக பந்து வீசி தன்னை இந்த உயரத்துக்கு கொண்டு வந்துள்ளார் எனச் சொல்ல வேண்டும்.
அசத்தும் ஆல் ரவுண்டர்:
இந்தியாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தொடரில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதை பிப்ரவரி மாதத்தில் உலகமே கண்டது, மேலும் முதலிடத்தில் உள்ள ஆல்-ரவுண்டர் ஜடேஜா தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணி தற்போது 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.
டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது உட்பட, பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்தியது தான் அவரை இந்த நிலைக்கு முதல் முறையாக உயர்த்தி உள்ளது. ஜூனில் ஓவலில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதை இலக்காகக் கொண்டு இந்த தொடர் முழுவதும் இந்திய அணி வீரர்கள் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரி ப்ரூக்ஸ்:
கடந்த ஆண்டு செப்டம்பரில் மட்டுமே தனது டெஸ்டில் அறிமுகமான போதிலும், இங்கிலாந்து பேட்டர் ப்ரூக் ஏற்கனவே இங்கிலாந்தின் புதிய ஆபத்தான மனிதராக உருவெடுத்து வருகிறார், மேலும் டிசம்பரில் ஐசிசி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பிறகு, அவரது வேகம் இன்னும் அதிகரித்துள்ளது.
பிப்ரவரியில் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக வெலிங்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 24 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்பட ஒரு இன்னிங்ஸில் 186 ரன்களை விளாசியிருந்தார். மொத்தம் நடந்த இரண்டு டெஸ்டில் அவர் 329 ரன்கள் எடுத்து உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஜிம்பாப்வேயில் மேற்கிந்தியத் தீவுகள் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதற்கு முக்கிய காரணமே, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மோட்டி தான் என்பது அவருக்கு கிடைத்துள்ள சிறப்பாகும். மொத்தம் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்திய மோட்டி, புலவாயோவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 13-99 என்ற மைல்கல்லைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் வரலாற்றில் ஒரு மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்து வீச்சாளரின் சிறந்த ஆட்டமாகும்.