Ronaldo Hat-trick: ஆல் டைமும் அய்யா கில்லிடா! மிரளும் எதிரணிகள்.. ஹாட்ரிக் கோல்களால் மிரட்டும் ரொனால்டோ.!
நேற்று நடந்த டமாக் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் அடித்து ரொனால்டோ அசத்தினார். கடைசி மூன்று போட்டிகளில் ரொனால்டோவின் இரண்டாவது ஹாட்ரிக் இதுவாகும்.
கால்பந்து உலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒன்று கிறிஸ்டியானோ ரொனால்டோ. கடந்த ஃபிபா உலகக் கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபொழுதும் ரொனால்டோ வெளியே உட்கார வைக்கப்பட்டார்.
இந்தநிலையில், தற்போது நடைபெற்று வரும் சவுதி புரோ லீக் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் ஒரு பவர்பேக் கொடுத்து அசத்தி வருகிறார். நேற்று நடந்த டமாக் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் அடித்து ரொனால்டோ அசத்தினார். கடைசி மூன்று போட்டிகளில் ரொனால்டோவின் இரண்டாவது ஹாட்ரிக் இதுவாகும்.
நேற்று நடந்த டமாக் அணிக்கு எதிராக கிளப் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ களமிறங்கினார். ஆட்டம் தொடங்கிய வெறும் 27 நிமிடங்களிலேயே ஹாட்ரிக் அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல் பாதியிலேயே ஹாட்ரிக் கோல் அடித்து கிளப் அல் நாசர் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
825TH CAREER GOAL FOR THE GREATEST CRISTIANO RONALDO 🐐🔥pic.twitter.com/yeVHFic3ac
— CristianoXtra (@CristianoXtra_) February 25, 2023
சவுதி புரோ லீக்கில் விளையாடி வரும் கிளப் அல் நாசர் அணி, 2019-ம் ஆண்டு முதல் சாம்பியன் ஆக முயற்சி செய்து வருகிறது. அட்டவணையில் ஏழாவது இடத்தில் இருக்கும் டமாக்கிற்கு எதிராக அவர் பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ரொனால்டோ 3 கோல்கள் அடித்து தனது ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தார்.
27 நிமிடங்களில் ஹாட்ரிக் கோல்கள்:
போட்டியின் கணக்கெடுப்பின்படி ஹாட்ரிக் கோல்கள் 45 நிமிடத்தில் அடிக்கப்பட்டு இருந்தாலும், உண்மையில் 27 நிமிடங்களுக்கு குறைவாகவே பதிவு செய்யப்பட்டது. போட்டியின் 18வது நிமிடத்தில் அவர் முதல் கோலை அடித்ததே இதற்குக் காரணம். முதல் கோல் அடிக்கப்பட்ட 5 நிமிடங்களில் ரொனால்டோ இரண்டாவது கோலை அடித்தார். இதற்குப் பிறகு, முதல் பாதி முடிவதற்குள் அவர் தனது மூன்றாவது கோலை அடித்து தனது ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தார்.
🎬 || In 90 seconds,
— AlNassr FC (@AlNassrFC_EN) February 25, 2023
That’s how we got the 3 points in Abha 🤩 pic.twitter.com/scT2jjA9rg
In 6 Games,
— AlNassr FC (@AlNassrFC_EN) February 25, 2023
Ronaldo has:
🔟 Contributions
8️⃣ Goals
2️⃣ Assists
And there’s much more 💪 pic.twitter.com/RnwKFdMoZj
827 கோல்கள்:
அல் நாசர் அணி கடைசி 5 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, 8 கோல்கள் அடித்துள்ளார். இதனுடன் ரொனால்டோவின் கேரியரில் அடிக்கப்பட்ட மொத்த கோல்களின் எண்ணிக்கை தற்போது 827ஐ எட்டியுள்ளது.