மேலும் அறிய
Nagapattinam: புகழ்பெற்ற புதிய ஒளி மாரியம்மன் ஆலய வைகாசி பெருவிழா.. ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து வழிபாடு!
நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலய வைகாசி பெருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

பால்குடம் எடுத்த பக்தர்கள்
நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலய வைகாசி பெருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். மழை பொழியவும் விவசாயம் செழிக்கவும், கடல் வளம் பெருக வேண்டியும் பக்தர்கள் பால் குடங்களை சுமந்து வந்து நேர்த்திகடன் நிறைவேற்றினர்.
நாகை மாவட்டம் நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது . முன்னதாக ஏழைப் பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள் நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தனர். பின்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் செய்யப்பட்டன. தமிழகத்தில் மழை பொழிய வேண்டும் விவசாயம் செழிக்க வேண்டியும், கடல் வளம் பெருகவும் கடலுக்கு மீன்பிடி தொழில் செய்ய கடலுக்கு செல்லும் தங்கள் உறவுகளை இயற்கை சீற்றங்களிலிருந்து காத்திட வேண்டியும் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
ஐபிஎல்
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion