கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷ விழா - நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வெள்ளி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து அதன் தொடர்ச்சியாக உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதன் பிறகு நந்தி பகவானுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கூறி இருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.