மேலும் அறிய

‘கொடுத்த காசுக்கு மேல கூவுறான்ப்பா’ EPS ஐ கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்..!

கலைஞர் தனது அறிவால், ஆற்றலால், தொட்ட துறைகள் எல்லாம் வெற்றி பெற்று தொலைநோக்குப் பார்வையால் நவீன தமிழ்நாட்டை தனது நிர்வாக திறனால் உருவாக்கினார்.

தஞ்சாவூர்: கொடுத்த காசுக்கு மேல கூவுறான்பா என்று எடப்பாடி பழனிசாமியை பார்த்து பாஜகவினர் கூறுகின்றனர். அந்தளவிற்கு பாஜகவின் வாய்ஸாக மாறிவிட்டார் பழனிசாமி என்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விமர்சனம் செய்து பேசினார்.

திருவாரூரில் ரூ.846 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 1234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து 2243 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 67 ஆயிரத்து 181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற இந்த மாபெரும் விழாவில் கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன். திருவாரூர் என்றாலே அனைவர் மனதிலும் திருவாரூர் தேர், தலைவர் கலைஞர் பெயர் மட்டுமே தோன்றும் என்பார்கள். தலைவர் பிறந்த ஊர் திருக்குவளை .இன்று நாகை மாவட்டத்தில் இருந்தாலும் ஒரு காலத்தில் அனைத்தும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தான். கலைஞர் தனது அறிவால், ஆற்றலால், தொட்ட துறைகள் எல்லாம் வெற்றி பெற்று தொலைநோக்குப் பார்வையால் நவீன தமிழ்நாட்டை தனது நிர்வாக திறனால் உருவாக்கினார். இன்று அவர் எங்கும் நிறைந்து நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.

நான் மற்ற மாவட்டத்தில் பேசும்போது மக்களிடம் உங்களில் ஒருவன் என்று சொல்வது உண்டு. திருவாரூர் மாவட்டம் மக்கள் மத்தியில் மட்டும் எங்களின் ஒருவன் என்று என்னை அன்போடு அரவணைக்கிறீர்கள். அதற்கு பெருமையோடு சொல்வேன் கலைஞர் ஆட்சிதான் மீட்சி தான். அமைச்சரவையில் தம்பிகள் படையும் தலைநிமிர்ந்து சொல்கின்ற திறமைசாலியாக தம்பி டி.ஆர்.பி. ராஜா உள்ளார். நான் உயரத்தை மட்டும் சொல்லவில்லை .அவரது சிறப்பான பணிகளையும் பற்றி கூறுகிறேன். டிஆர்பி ராஜா உழைப்பாலும் சாதனையாலும் தமிழ்நாட்டின் தொழில்துறை அவர் போல் உயர்ந்து நிற்கிறது. அவரது உழைப்பால் ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது. முதலீடுகள் அதிகரிக்கிறது. வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது. அனைத்து மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டங்களாக மாறி வருகிறது. செய்தி சேனல்களின் வளர்ச்சியை டிஆர்பி ரேட்டிங் வைத்து சொல்வார்கள். அதேபோல் நமது திராவிட மாடல் ஆட்சியில் டிஆர்பி ராஜாவின் செயல்பாடுகளை வைத்து கணிக்கலாம். பூண்டி கலைவாணன் திருவாரூரை திருவிழாவாக்கி எனது மனதை இனிக்க வைத்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு எந்த பொறுப்பை கொடுத்தாலும் சிறப்பாக பணி முடிக்கும் திறன் கொண்டவர்தான் கலைவாணன். திருவாரூரை பொறுத்தவரை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 22 ஆண்டுகள் ஓடாத திருவாரூர் தேரை நவீன தொழில்நுட்பத்தில் பக்தர்கள் பரவசம் அடையும் வகையில் ஓட்டி காட்டியவர். 

திருவாரூர் மாவட்டத்தை தலைநகரமாக ஆக்கியவர். ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், திருவாரூர் நகராட்சிக்கு புதிய கட்டிடம், மாவட்ட காவல் அலுவலகம், புதிய பேருந்து நிலையத்திற்கு 2010ல் அடிக்கல் நாட்டு விழா என அனைத்தும் கலைஞரால் உருவானது. 1970ல் திருவாரூரில் திருவிக அரசு கல்லூரி கொண்டு வந்தது கலைஞர் தான் என்பதை அனைவரும் அறிவார்கள். 2003ல் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கொண்டு வந்ததார். அது மட்டுமல்ல. 2010ல் மருத்துவக் கல்லூரி, மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி, பாமணி உரத் தொழிற்சாலை உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கோசி மணி மாவட்டம் முழுவதும் குடிநீர் வசதிகளை உருவாக்கி தந்தார் . டி ஆர் பாலுவின் முயற்சியால் ஐந்து புதிய ரயில்கள் இயக்கப்பட்டது. அதில் முக்கியமானது செம்மொழி எக்ஸ்பிரஸ். மன்னையிலிருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் விட்டதும் கழகத்தின் முயற்சியால்தான்.

மாற்றுக் கட்சிகள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் திருவாரூர் வறண்ட ஆறு போல் காய்ந்து விடும். திமுக ஆட்சிக்கு வந்தால் திருவாரூர் ஆடிப்பெருக்கு போல் மலர்ந்து காணப்படும். நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், கொரடாச்சேரி, திருவாரூர் ஆகிய 6 ஒன்றியங்களில் உள்ள 662 குடியிருப்புகளுக்கு 880 கோடி ரூபாய் மதிப்பில் கொள்ளிடம் ஆற்று நீரை கொண்டு தொடங்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. 

அமைச்சர் நேரு உறுதி கொடுத்துள்ளார். இந்தத் திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார். அது மட்டுமல்ல கூத்தாநல்லூர்,  திருவாரூர் நகராட்சிகளில் 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 49 பாலங்கள் கட்டக்கூடிய பணிக்கு திட்டமிட்டு அதனுடைய பணிகளும் நடைபெற்று வருகிறது. முத்துப்பேட்டையில் ரூ.10  கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைக்கக்கூடிய பணியும் நடைபெற்று வருகிறது. முக்கியமாக மன்னார்குடி, கூத்தாநல்லூர் வட்டங்களில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் தொழில் வளாகம் அமைக்கக்கூடிய முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளது. 

பயிர் காப்பீடு திட்டத்தை எடுத்து பார்த்தால் 7,77605 விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். இதுவரை 143 கோடியை 78 லட்சம் ரூபாய் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் மட்டும் இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து 100 விவசாயிகளுக்கு 1556 கோடியே 26 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2426 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவசம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 14 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நவீன மேற்கூரையுடன் கூடிய சேமிப்பு தலங்கள்.39 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற புதிய அறிவிப்புகளை நான் வெளியிடாமல் வரமாட்டேன். முதலாவது அறிவிப்பு திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த ஜூபிலி மார்க்கெட் பகுதியில் 11 கோடி ரூபாய் செலவில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். இரண்டாவது அறிவிப்பு திருவாரூர் மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் நன்னிலம் வட்டம் வண்டாம் பாளை ஊராட்சியில் 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளோடு திருவாரூர் மாவட்டத்தில் புதிய மாதிரி பள்ளி அமைக்கப்படும். மூணாவது அறிவிப்பு மன்னார்குடி பகுதியில் இருக்கக்கூடிய மாணவிகள் பயன்பெறும் வகையில் மன்னார்குடி நகராட்சியில் 18 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக தொடங்கப்படும். நான்காவது அறிவிப்பு திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆறுகள் வாய்க்கால்கள் வடிகால்கள் மதகுகள் மற்றும் நீர் ரெகுலேட்டர்கள் ஆகியவை 43 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு நன்னிலம் வட்டத்தில் இருக்கக்கூடிய பூந்தோட்டம் பகுதி மக்களுடைய நீண்ட கால கோரிக்கையான புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ஆறாவது அறிவிப்பு பாரம்பரிய நெல் ரகங்களை தன் வாழ்நாள் முழுவதும் பேணி பாதுகாத்த நெல் ஜெயராமன் அவரது அரும்பணியை போற்றப்படும் வகையில் திருத்துறைப்பூண்டியில் அவருக்கு நினைவுச்சிலை அமைக்கப்படும். இந்த அறிவிப்புகள் எல்லாம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். தலைமைச் செயலகத்தை துறைவாரியான ஆய்வை நான் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறேன். நமக்கு இடையூறாக இருக்கக்கூடிய மத்திய அரசையும் சமாளித்து இவ்வளவு சாதனைகளையும் செய்திருக்கிறோம். தொடர்ந்து செய்ய தான் போகிறோம். இதெல்லாம் பார்த்து தாங்கிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி அவர்கள் இப்ப என்ன செய்கிறார். தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தை தொடங்கி இருக்கிறார். ஏன்னா தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று சொல்லுகிற கூட்டத்துகிட்ட இப்ப அதிமுகவை சேர்த்து விட்டார். அதிமுகவை மீட்க முடியாத இவர் தமிழகத்தை மீட்க போகிறாராம். பழனிச்சாமி அவர்களே உங்களிடமிருந்து ஏற்கனவே தமிழ்நாடு மீட்கப்பட்டு விட்டது. கூவத்தூரில் ஏலம் எடுத்து கலெக்ஷன் கரெப்சன் கமிஷன் என தமிழ்நாடே பார்க்காத அவலமான ஆட்சி நடத்தினீர்கள். கொஞ்சம் நஞ்சமல்ல செய்த குற்றங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடமிருந்து  ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழர்களை அங்கு கொண்டு போய் அவர்களது உரிமையில் அடகு வைத்தீர்கள். நீங்கள் செய்த கேடுகள் ஒன்றா இரண்டா அதையெல்லாம் சரி செய்து இன்று இந்தியாவிலேயே தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி தான் நம்பர் ஒன். 9.69 விழுக்காடு. இதை நான் சொல்லவில்லை.

இதை மத்திய அரசே சொல்லி இருக்கிறார்கள். ஒன்றிய அரசு முடியவில்லை. மறுக்க முடியவில்லை. தலை நிமிர்ந்த தமிழ்நாட்டை இன்று வளர்த்து எடுத்திருக்கிறோம். வெளிமாநில மக்கள் எல்லாம் தமிழ்நாட்டை பற்றி பெருமையோடு பேசுகிறார்கள். இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது பழனிச்சாமி அவர்களே. உங்களுக்கு தெரிந்ததெல்லாம் துரோகம் செய்வது மட்டும்தான். உங்களைக் கொண்டு வந்தவர்களுக்கு துரோகம் செய்து வெளியே அனுப்பினீர்கள் உங்களை நம்பி கொடுக்கப்பட்ட கட்சிக்கு அந்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்து கூட்டணி வைத்தீர்கள்.

நமது பெருமை வெளியில் வரக்கூடாது என்பதற்காக கீழடி ஆய்வு அறிக்கையை தர மறுக்கின்றனர். கீழடி என்றால் பழனிச்சாமிக்கு என்ன தெரியும். அவர் கீழே படுத்துக் கொண்டு செல்கிறாரே, அதுதான் அவருக்கு தெரியும், தொகுதி மறுவரையறை பிரச்சனை. இப்படி தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளை பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துக் கூச்சம் இல்லாமல் எப்படி உங்களால் பயணம் செய்ய முடிகிறது. அது மட்டுமல்ல வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

சமீபத்தில் பேசியிருக்கிறார் இந்து சமய அறநிலை துறை சார்பில் பள்ளி கல்லூரி கட்டக்கூடாதாம். இதுக்கு முன்னாடி பாஜகவிற்கு வெறும் டப்பிங் வாய்ஸ் தான் கொடுத்துக் கொண்டிருந்தார். இப்ப பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேச ஆரம்பித்து விட்டார்.

அறநிலையத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்க சட்டம் இருக்கு. இது கூட தெரியாமல் நீங்கள் எப்படி தான் முதலமைச்சராக இருந்தீர்களோ. எனக்கு தெரியவில்லை. மறைந்த முதல்வர் பக்தவச்சலம் காலம் தொடங்கி எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது பழனி ஆண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியை தொடங்கி வைத்துள்ளார்.

அந்தக் கல்லூரியில் கூடுதல் கட்டிடத்தை கடந்த முறை முதல்வராக இருந்தபோது நீங்கள் திறந்து வைத்தீர்கள். அப்போது ஏதாவது மயக்கத்தில் சென்று திறந்து வைத்துவிட்டு வந்தீர்களா. இதுபோன்று பாஜக  தலைவர்கள் கூட இதுபோன்று கல்லூரி தொடங்கக்கூடாது என பேசுவதில்லை. பழனிச்சாமி மட்டும் பேசுகிறார். இதை பார்க்கும் பொழுது ஒரு படத்தில் வரும் வடிவேலுவின் காமெடிதான் நினைவிற்கு வருகிறது. கொடுத்த காசுக்கு மேல் என்னமா கூவுறான் . அது போன்று பாஜகவினரே பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையை பொருத்தவரை தமிழகத்தை பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சி செய்துள்ள சாதனைகள் லிஸ்ட் அதிகம். கல்விக்காக உண்மையில் குரல் எழுப்புவதாக இருந்தால் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். இரண்டு மாதங்கள் ஆன போதும்

கவர்னர் ஒப்புதல் தரவில்லை. எதிர்க்கட்சி தலைவரான நீங்கள் இதுகுறித்து கேட்பீர்களா. நீங்கள் கேட்காவிட்டாலும் நாங்கள் நிச்சயமாக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு செயல்படுத்துவோம்.  தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து கொண்டு இருக்கும் நீங்கள் எத்தனை பயணம் செய்தாலும் மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். துரோகங்கள் தான் உங்களது வரலாறு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் எதிரிகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும். நீங்கள் எங்களுடன் ஓரணியில் ஒற்றுமையாக நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
Trump Vs Modi: “மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
“மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
Trump Vs Modi: “மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
“மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
Pakistan Vs Afghanistan: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
TN Weather: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்.? புதிய புயலுக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்- எப்போ தெரியுமா.?
தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்.? புதிய புயலுக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்- எப்போ தெரியுமா.?
Vaiko: எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
Embed widget