நடிகர் கிங்காங் மகள் திருமணம்.. ஆனந்த கண்ணீர் வடித்த மகள்.. திரை பிரபலங்கள் பங்கேற்பு
நடிகர் கிங்காங் மகள் திருமணம் இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உயரம் குறைந்தாலும் திறமையால் ரசிகர்களின் மனதை வென்றவர் கிங்காங். இவரது முழு பெயர் ஷங்கர் ஏழுமலை. கிங்காங் என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி பிரபலம் அடைந்ததன் மூலம் அந்த பெயரிலேயே திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதிசய பிறவி படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து கிங்காங் நடனமாடும் காட்சிகளை எவராலும் மறக்க முடியாது. அவர் நடனத்தில் மட்டும் அல்ல நடிகர்கள் வடிவேலு, விவேக் போன்றோருடன் இணைந்து காமெடி கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
திரை பிரபலங்களுக்கு அழைப்பு
இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். அண்மையில் இவரது மகள் கீர்த்தனாவின் திருமணத்திற்காக திரை பிரபலங்களான ரஜினி, கமல், விஷால், சூர்யா உள்ளிட்ட பலரையும் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதேபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்திற்காக அழைப்பு கொடுத்திருந்தார்.
மகள் திருமணம்
இந்நிலையில், இன்று காலை கிங்காங் மகள் கீர்த்தனா -நவீன் ஆகியோரின் திருமணம் பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் கிங்காங்கின் உறவினர்கள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் மட்டும் கலந்துகொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் கிங்காங் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருமண வரவேற்பு
கிங்காங் மகளின் திருமணம் முடிந்த நிலையில், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை சென்னை அசோக் பகுதியில் இருக்கும் MPK மஹாலில் திருமணம் நடைபெறுகிறது. திரையுலகைச் சேர்ந்த பலரும், அரசியல் தலைவர்கள் பலரும் இத்திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவிருகின்றனர். இன்று இரவு மெகா விருந்து நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நடிகர் ரஜினி, கமல், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





















