மேலும் அறிய
ICC Champions trophy 2013 : 10 வருடங்களுக்கு முன் இதே நாளில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா!
தோனி தலைமையில் 10 வருடங்களுக்கு முன் இதே நாளில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2013
1/6

2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்தது. இதில் 8 அணிகள் பங்கேற்றன.
2/6

இதில் 4 அணிகள் குரூப் ஏ-வாகவும் மற்ற நான்கு அணிகள் குரூப் பி-யாகவும் பிரிக்க பட்டு போட்டி நடத்தப்பட்டது.
3/6

இதில் குரூப் பி-யில் இந்தியா ஆடியது. ஒரு அணி மற்ற அணிகளுடன் தல ஒரு முறை மோத வேண்டும். இந்தியா இந்த லீக் தொடரில் தோல்வியே அடையவில்லை என்பது குறிப்பிடதக்கது
4/6

குரூப் ஏ-யில் இங்கிலாந்து அணி முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்தும் இந்தியாவும் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
5/6

இறுதி போட்டி நடக்கும் நாள் அன்று கனமழை பெய்ததால் 50 ஓவர் ஆட்டம் 20 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.
6/6

முதலில் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 129 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 124 ரன்கள் எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. தோனி கேப்டனாக இருந்த காலத்தில் அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற புகழையும் பெற்றார் தோனி.
Published at : 23 Jun 2023 05:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement