Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
US Tariffs Country Wise List: இந்தியாவிற்கு அதிரடியாக 25% கூடுதல் வரியை விதித்த ட்ரம்ப், மற்ற நாடுகளுக்கு விதித்துள்ள வரிகள் எவ்வளவு.? எந்த நாட்டிற்கு அதிகம் தெரியுமா.? அந்த பட்டியலை பார்க்கலாம்.

இந்தியாவிற்கு நேற்று 25 சதவீத கூடுதல் வரியை விதித்து உத்தரவிட்ட ட்ரம்ப், 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விதித்த பரஸ்பர வரி அமலுக்கு வந்துள்ளது. அவர் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி வதித்துள்ளார், அதில் எந்த நாட்டிற்கு அதிகம் என்பது குறித்த விவரங்களை தற்போது காணலாம்.
இந்தியா உள்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வரி விதித்த ட்ரம்ப்
இந்தியா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விதித்த பரஸ்பர வரி அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு பல்வேறு நாடுகளும் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தங்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதில் வரியை விதிக்கப் போவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து வரிகளை அறிவித்த ட்ரம்ப், அது அமலுக்கு வரும் தேதியை இரு முறை தள்ளி வைத்தார். அதற்குள், அனைத்து நாடுகளும் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கெடு விதித்திருந்தார்.
ஆனால், இந்தியா பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை நடத்திய நிலையில், சில நாடுகள் மட்டுமே ஒப்பந்தங்களை மேற்கொண்டன. இந்நிலையில், ஒப்பந்தங்களை மேற்கொள்ளாத நாடுகளுக்கு வரி தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவை மிரட்டிய ட்ரம்ப்
அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்திய குழு வாஷிங்டனில் முகாமிட்டு, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால், அமெரிக்கா விதித்த நியாயமற்ற நிபந்தனைகளை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவை எச்சரித்த ட்ரம்ப், அப்படி செய்யாவிட்டால், கூடுதல் வரியையும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு அபராதமும் விதிக்கப்போவதாக எச்சரித்திருந்தார்.
ஆனால், இந்தியா எந்தவித சாதகமான பதிலையும் கொடுக்காததால், நேற்று அதிரடியாக இந்தியாவிற்கான வரியை மேலும் 25 சதவீதம் அதிகரித்து, மொத்த வரி 50 சதவீதம் என அறிவித்து, அதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்தும் இட்டார். இதனால் வரிகள் அமலுக்கு வந்தன.
அதோடு சேர்த்து, 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரியையும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதில் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி என்பதை பார்க்கலாம்.
வரி விதிக்கப்பட்ட முக்கிய நாடுகளின் பட்டியல்
அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகள்
- பிரேசில் - 50%
- சிரியா - 41%
- லாவோஸ் - 40%
- மியான்மர் - 40%
- சுவிட்சர்லாந்து - 39%
- கனடா - 35%
- செர்பியா - 35%
- அல்ஜீரியா - 35%
- போஸ்னியா - 35%
- ஈராக் - 35%
- சீனா - 30%
- தென் ஆப்பிரிக்கா - 30%
மற்ற முக்கிய நாடுகளுக்கு எவ்வளவு.?
- இலங்கை - 20%
- தாய்வான் - 20%
- ஆப்கானிஸ்தான் - 15 - 20%
- வங்கதேசம் - 15 - 20%
- கம்போடியா - 15 - 20%
- கோஸ்டாரிக்கா - 15 - 20%
- இஸ்ரேல் - 15 - 20%
- பாகிஸ்தான் - 19%
- பிலிப்பைன்ஸ் - 19%
- ஐரோப்பிய யூனியன் - 19%
- ஜப்பான் 15%
- தென் கொரியா - 15%
சீனா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதான வரிகள் குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகவில்லை. அது குறித்து வரும் 12-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ள ட்ரம்ப், சீனா ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால், இந்தியாவைப் போல் அதிக வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















