மேலும் அறிய

Russia Vs Ukraine: அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்

ஒருபுறம் அமைதிக்கான முயற்சிகள் நடந்தாலும், உக்ரைனின் பகுதிகளை ஆக்கிரமிப்பதை ரஷ்யா நிறுத்தவில்லை. இந்நிலையில், இன்று உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்திற்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன.

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், அவை அனைத்திற்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஒருபுறம் பேச்சுவார்த்தையில் பங்கேற்றாலும், மறுபுறம் உக்ரைனின் பகுதிகளை ஆக்கிரமிப்பதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தற்போது உக்ரைனின் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் ரஷ்ய படைகள் நழைந்துள்ளன.

உக்ரைனில் 8-வது பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன், ரஷ்ய அதிபர் புதின் சந்தித்த நிலையில், உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை முயற்சி மேற்கொண்டு முன்னேற்றமில்லாமல் தடைபட்ட நிலையில், உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தில் உள்ள கிராமங்களில், ரஷ்யப் படைகள் நுழைந்துள்ளன. இதோடு சேர்த்து 8-வது பிராந்தியத்தில் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது.

டொனெட்ஸ்க் பிராந்தியதில் கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் தொழில்துறை மையமாக விளங்கும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நோவோஹெயோர்ஹிவ்கா மற்றும் சபோரிஸ்கே ஆகிய கிராமங்களில், ரஷ்யப் படைகள் ஊடுருவியுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா, 2 கிராமங்களை பிடித்துள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால், அந்த கிராமத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றவில்லை, சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என உள்ளூர் தரைப் படைகளின் செய்தி தொடர்பாளர் விக்டர் ட்ரேஹுபோவ் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய ராணுவப் பலம் கொண்ட ரஷ்யாவை, மீண்டும் பின்னுக்குத் தள்ளும் அழுத்தத்திற்கு உக்ரைன் படைகள் உள்ளாகியுள்ளன. சுமார் 1000 கி.மீ. எல்லையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் சண்டையில்,  இரு தரப்பிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யப் படைகள் ஏற்கனவே, சுமி, கார்கிவ், லுகான்ஸ்க், டொனெட்ஸ்க், சபோரிஸ்சியா, கெர்சன், மைகோலைவ் பிராந்தியங்களில் ஊடுருவி உள்ளன.

அமைதிப் பேச்சுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் புதின்

கடந்த 2014 மார்ச் மாதம் உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா சட்டவிரோதமாக கைப்பற்றியது, தற்போதைய சண்டையில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. ஒருபுறம் அமைதிக்கான முயற்சிகள் நடைபெற்றாலும், அதை ரஷ்ய அதிபர் புதின் தாமதப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அவர் சந்தித்து பேசினாலும், போர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதே சமயம், உக்ரைனிற்குள் ஊடுருவுவதையும் ரஷ்யா நிறுத்தவில்லை. பேச்சுவார்த்தை ஒருபுறம், தாக்குதல் ஒருபுறம் என, ரஷ்யா தனது ஆட்டத்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இதற்காக, ரஷ்ய அதிபர் புதின் மீது மேற்கத்திய நாட்டு தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, ரஷ்ய அதிபர் புதினையும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் நேரடியாக சந்திக்க வைக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், புதின் அதற்கு ஒத்துவருவாரா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

 

தலைப்பு செய்திகள்

France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
விஜய்யை ஆபாசமாக திட்டிய திமுக பெண் நிர்வாகி.. ரசித்து சிரித்த மேயர் பிரியா! சரமாரியாக குவியும் கண்டனங்கள்!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Embed widget