மேலும் அறிய

EPS Slams DMK: 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்

திமுக அரசை கடுமையாக விமர்சித்து, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய சாராம்சத்தை காணலாம்.

“புதிய புரளியை கிளப்பும் திமுக அரசு“

“போட்டோசூட் நடத்தி, பெயர் வைப்பதில் சாதனை புரிந்துவரும் திமுக அரசு, 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என்று ஒரு புதிய புரளியைக் கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல்; மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல்; மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் கொடுக்காமல் வெற்று விளம்பரம் செய்யும் திறனற்ற அரசு என்று திமுக-யை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறோம். இதனை நிரூபிக்கும் வகையில் விடியா அரசு மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி வருகிறது.

இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு என்பதும் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ் தாடு என்பதும், ஒரு மாய விளம்பரம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளி விபரங்கள் எல்லாமே,

முதல் முன்கூட்டிய மதிப்பீடு,

இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடு,

தற்காலிக மதிப்பீடு,

முதல் திருத்தப்பட்ட மதிப்பீடு,

இரண்டாம் திருத்தப்பட்ட மதிப்பீடு,

மூன்றாம் திருத்தப்பட்ட மதிப்பீடு என,

பல்வேறு நிலைகளில் ஆறு கட்டங்களாக வெளியிடப்பட்டு, அதன் பிறகே இறுதி மதிப்பீடு வெளியாகும். இந்தப் புள்ளி விபரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் அடையும் என்பதே உண்மை. இந்த வகையில் கடந்த 17.3.2025 அன்று தமிழ் நாட்டின் வளர்ச்சி 2024-25 ஆண்டுக்கு 9.69% என கணிக்கப்பட்டது. இதுவே 1.8.2025 கணிப்பில் 11.19% என்று உயர்ந்துள்ளது.

“மாய தோற்றத்தை உருவாக்குகிறது திமுக அரசு“

உடனே தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு, இரு இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று மார்தட்டிக்கொண்டு பெரிய பெரிய விளம்பரங்களை வெளியிட்டு ஒரு மாயத் தோற்றதை உருவாக்குகிறது. இந்தக் கணிப்பு இறுதியானது அல்ல என்பதும், அடுத்தடுத்த கணிப்புகளில் இது மாறலாம் என்பதுமே உண்மை.

இவர்களுக்கு சாதகமான ஒரு புள்ளி விபரம் வந்தவுடன், 2030-ல் இவர்கள் கூறியபடி தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டிவிடும் என்று போலியாக பெருமைப்படுகிறார்கள். 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது, இவர்கள் தெரிந்தே மக்களை ஏமாற்றுவதற்குக் கூறும் மாபெரும் பொய்.

பொருளாதார புள்ளி விபரங்கள் எல்லாம் ஒரு குறியீடு மட்டும்தான். அவை, இறுதி நிலையை அடையும் போதுதான் உண்மை விளங்கும். உண்மையில், தமிழகத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். எனவே, முதற்கட்ட, இரண்டாம் கட்ட பொருளாதார புள்ளி விபரங்களை வைத்துக்கொண்டு விளம்பரம் தேடுவதை விட்டுவிட்டு, இனியாவது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.

“வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்“

பொருளாதார வளர்ச்சியோ, அதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் தனிநபர் வருமானமோ ஒரு குறியீடுதானே தவிர, அது மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் காட்டும் அளவுகோலாக கருத முடியாது. எனவே, உண்மையை ஸ்டாலின் அரசு உணர்ந்து, வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். இதைச் சொன்னால்கூட தி.மு.க. ஜால்ராக்கள், நாம் பொறாமையில் கூறுவதாகச் சொல்வார்கள். ஆனால், உண்மையை மக்களுக்கு உரக்கச் சொல்ல வேண்டியது நமது கடமை என்பதாலேயே இதனைக் கூறுகிறோம்.

  • உண்மையில், விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். ஏனென்றால், நீர் ஆதாரம் பராமரிக்கப்படவில்லை.
  • விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லை.
  • கிராமந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி பரிதவிக்கின்றனர்.
  • நெசவாளர், மீனவர் என்று யாருமே நிம்மதியாக இல்லை.
  • எல்லா இடங்களிலும் லஞ்ச, லாவண்யம் புரையோடி இருக்கிறது. விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.
  • சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். அரசு ஊழியர்கள் வெறுப்பின் விளிம்பில் உள்ளனர்.
  • தமிழகம் முழுக்க இந்த அரசுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசுவதை, என் பயணத்தில் கண் எதிரே காண முடிகிறது.

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பதையும், தி.மு.க.வின் ரவுடிப் பட்டாளத்தின் அட்டூழியத்தைக் கண்டும், மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொய் சொல்லி விளம்பர சூட்டிங் நடத்தும் தி.மு.க. ஆட்சிக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Embed widget