நடிகை நிவேதா பெத்துராஜூக்கு திருமணம்...இவர்தான் மாப்பிள்ளை
Nivetha Pethuraj Lover : நடிகை நிவேதா பெத்துராஜூக்கு தொழிலதிபர் ரதித் இப்ரான் என்பவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது

நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் அவரது நீண்ட நாள் காதலன் ரஜித் இப்ராமுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
நிவேதா பெத்துராஜ் காதலன்
ஒரு நாள் கூத்து படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகிய நிவேதா பெத்துராஜ் சிறிய காலத்திற்குள்ளாகவே பெரிய ரசிக கவனத்தை பெற்றவர். பொதுவாக என் மனசு தங்கம் , டிக் டிக் டிக் , சங்கத் தலைவன் ஆகிய படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். நடிப்பு தவிர்த்து பேட்மிண்டன் , ஃபார்முலா 1 கார் பந்தையம் போன்ற விளையாட்டுக்களிலும் ஆர்வம் உள்ளவர். நிவேதா பெத்துராஜ் பிரபல அரசியல் பிரமுகருடன் காதல் உறவில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மேலும் இந்த அரசியல் பிரமுகர் அவருக்கு 50 கோடியில் துபாயில் வீடு வாங்கித் தந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளுக்கு சரியான பதிலடி கொடுத்து மறுத்தார் நிவேதா.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நீண்ட நாள் காதலனுடன் புகைப்படத்தை வெளியிட்டு தன்னைப் பற்றி வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். மாடலிங் துறை மற்றும் தொழிலதிபர் ரஜித் இப்ரான் நிவேதா மற்றும் பெத்துராஜூக்கு இந்த ஆண்டின் இறுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இந்த திருமண நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Actress Nivetha Pethuraj is set to marry businessman #RajhithIbran later this year.
— Ramesh Bala (@rameshlaus) August 27, 2025
The wedding will be a private affair with close family and friends, while official details are expected to be announced soon.
Fans and well-wishers are already sending their love and… pic.twitter.com/YmIX0MJPTj





















