தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
Tamilnadu Temperature Weather: தமிழ்நாட்டில் இன்று சேலம், கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வெயிலானது 100 டிகிரி பாரஹீட்டை தாண்டியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 105.6 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று சேலம், கரூர் பரமத்தி, ஈரோடு, மதுரை ( விமான நிலையம் ), திருச்சி, திருத்தணி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையி, நாளைய வானிலை குறித்த தகவலையும், எந்த மாவட்டத்தில் எவ்வளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
வெப்பநிலை:
வேலூரில் 105.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், சேலத்தில் 103.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் , கரூர் பரமத்தியில் 103.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் ஈரோட்டில் 102.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரையில் ( விமான நிலையம் ) 101.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், திருச்சி 101.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் , திருத்தணியில் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், தருமபுரியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், திருப்பத்தூரில் டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) March 28, 2025
ஏழு தினங்களுக்கான வானிலை நிலவரம்:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றைய வானிலையை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இதையடுத்து வரும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் மார்ச் 31 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிக்க: Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
இதையும் படிக்க: தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
2 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு:
01-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.02-04-2025 மற்றும் 03-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 28-03-2025 முதல் 30-03-2025 வரை; தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















