TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார் என தவெக தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கதறல் சத்தம் எப்படி இருக்கு? ஒவ்வொரு குடும்பமும் வாழ வேண்டும் என்பது நல்ல அரசியலா? ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி வாழவேண்டும் என நினைப்பது நல்ல அரசியலா?
மாநாட்டில் இருந்து இப்போது வரை இடையூறு கொடுக்கிறார்கள். மாண்புமிகு மன்னராட்சி அவர்களே… மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே..
அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றை தடுக்க முடியாது. தடுக்க நினைத்தால் சூறாவளியாகவும் மாறும். புயலாகவும் மாறும்.
எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடி எங்களுக்கு மட்டும் ஏன்? உங்க ஆட்சியை பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. ஒழுங்கா ஆட்சி நடத்திருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்கா இருந்திருக்கும். இதில் உங்களை அப்பான்னு வேற கூப்பிடுகிறார்கள் என சொல்லுகிறீர்கள்.
உங்கள் ஆட்சிக்கு பெண்கள் தான் முடிவு கட்டப்போறாங்க. பரந்தூர் போராட்டம், மீனவர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், என சொல்லிக்கொண்டே போகலாம்.
என் கட்சி தொண்டர்களை பார்க்க தடை போட நீங்கள் யார்? இங்க நீங்க இப்படி இருக்கீங்க என்று பார்த்தால் மத்தியில் மாண்புமிகு மோடி ஜி அவர்களே…
என்னமோ உங்க பேரெல்லாம் சொல்ல எங்களுக்கு பயம் மாதிரி சொல்லிடுறீங்க. ஏன் ஜி.? தமிழர்கள் தமிழ்நாடுன்னா அலர்ஜி?
ஜி.எஸ்.டி தொகையை வாங்கிக்கிறீங்க. ஆனால் பட்ஜெட்டில் தொகையை ஒதுக்க மாட்டேங்குறீங்க. தமிழ்நாட்டை பார்த்து கேண்டில் பண்ணுங்க சார். தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன மாநிலம் சார். பார்த்து பண்ணுங்க சார்.
மும்மொழிக்கொள்கையை திணிக்கிறீங்க. ஒரே நாடு ஒரே தேர்தல் என கொண்டு வந்த போதே தெரிந்து விட்டது மோடி சார். நீங்கள் நாட்டை எந்த வழியில் மாற்ற நினைக்கிறீர்கள் என்று. தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார். திமுகவின் சீக்ரெட் ஓனர் பாஜகதான்.
2026ல் அறுதி பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமையும். தவெக ஆட்சி அமைந்தால் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம். தொழிலாளர்கள் பக்கம் கண்டிப்பாக துணை நிற்போம். எங்கள் அரசியலை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இரண்டே கட்சிகளுக்கு இடையேதான் போட்டி. ஒன்னு TVK. இன்னொன்னு DMK. நல்லதே நடக்கும். மக்கள் ஆட்சி அமையும்” எனப் பேசினார்.

