Divyabharathi : உங்களுக்கு அவ்ளோதான் லிமிட்...ஜி.வி விவாகரத்திற்கு நான் காரணமா...திவ்யபாரதி ஆவேசம்
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் விவாகரத்திற்கு தான் காரணம் என சமூக வலைதள வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை திவ்யபாரதி

ஜி.வி பிரகாஷ் - திவ்யபாரதி
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. இந்த படத்தைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். ஜி.வி மற்றும் திவ்யபாரதி இருவரும் டேட் செய்து வந்ததாக சமூக வலைதளங்கள் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. சமீபத்தில் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சந்தவியுடன் விவாகரத்து பெறுவதாக தெரிவித்தார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இப்படியான நிலையில் ஜி.வி மற்றும் சந்தவி பிரிவுக்கு திவ்யபாரதி தான் காரணம் என ஆதாரமற்ற தகவல்கள் பரவி வந்தன. இதற்கு தற்போது திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்
ஜி.வி பிரிவுக்கு நான் காரணமில்ல
சம்பந்தமே இல்லாமல் ஒரு குடும்ப விஷயத்துடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். ஜி.வி.யின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் ஒருபோதும் ஒரு நடிகருடன் டேட்டிங் செல்ல மாட்டேன், நிச்சயமாக ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செல்ல மாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் என் கவனத்தை ஈர்க்கத் தேவையில்லை என்று நம்பி நான் இதுவரை அமைதியாக இருந்தேன். இருப்பினும், இது எல்லை கடந்து போகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண், நான் வதந்திகளால் வரையறுக்கப்பட மாட்டேன். எதிர்மறையைப் பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். எனது எல்லைகளை மதிக்கவும். இந்த விஷயத்தில் இது எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை.

