மேலும் அறிய

Gold Rate Today: 4 நாளில் 1000 ரூபாய் சரிவு.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்னும் குறைஞ்சா நல்லாருக்கும்

gold rate today: தமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூபாய் 1000 வரை குறைந்துள்ளது.

Gold Rate Today Chennai: இந்தியாவில் கோடீஸ்வர மற்றும் உயர்மட்ட மக்களின் ஆபரணமாக தங்கம் இருந்தாலும், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் அத்தியாவசிய மற்றும் ஆபத்பாந்தவனாக இருப்பது தங்கம், உலகிலேயே அதிகளவு தங்கம் பயன்பாட்டில் உள்ள நாடாகவும் தங்கம் உள்ளது. 

தங்கம் விலை:

இந்திய மக்களின் தேவை காரணமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்ட வருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை உயர்வு என்பது மக்களை அச்சுறுத்தி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், காசா - இஸ்ரேல் போருக்குப் பின் ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தில் முதலீடு செய்வதால் அதன் விலை உச்சத்திற்கு ஏறியது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. 

4 நாட்களில் 1000 ரூபாய் சரிவு:

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை உச்சத்தில் உயர்ந்து கொண்டே இருந்தது. கடந்த 25ம் தேதி வரலாற்றிேல இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 8 ஆயிரத்து 075க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 64 ஆயிரத்து 600க்கு விற்கப்பட்டது. 

இந்த சூழலில், தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிந்து வருகிறது. மக்களை மகிழ்விக்கும் அளவிற்கு பெரியளவு சரியாவிட்டாலும் படிப்படியாக குறைந்துள்ளது. சென்னையில் கடந்த 25ம் தேதி ரூபாய் 8 ஆயிரத்து 75க்கு விற்கப்பட்ட சவரன் தங்கம் மார்ச் 1ம் தேதியான இன்று ரூபாய் 7 ஆயிரத்து 940க்கு விற்கப்படுகிறது. கடந்த மார்ச் 25ம் தேதி ரூபாய் 64 ஆயிரத்து 600க்கு விற்கப்பட்ட தங்கம் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூபாய் 1000த்திற்கு குறைந்து ரூபாய் 63 ஆயிரத்து 520க்கு இன்று விற்கப்படுகிறது. 

இன்னும் எட்டாக்கனி:

இந்த விலை என்பதே சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இதனால், தங்கம் விலை மேலும் குறையாதா? என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். கடந்தாண்டு மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்த காரணத்தால் தங்கத்தின் விலை சரிந்தது. அதன்பின்பு, மீண்டும் தங்கத்தின் விலை உச்சத்திற்குச் சென்றது. 

இதனால், இந்தாண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் மத்திய அரசு அதுபோன்ற அறிவிப்பை வெளியிடுமாறு? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், தற்போது வரை உச்சத்தில் உள்ள தங்கத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 




தலைப்பு செய்திகள்

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Apollo Hospitals: ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget