மேலும் அறிய
Allu Arjun: சிறையில் இருந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜுனுக்கு திருஷ்டி கழித்து; கட்டி அணைத்து வரவேற்ற குடும்பத்தினர்!
Allu Arjun Photos: புஷ்பா 2 பட நாயகன் அல்லு அர்ஜுன், சந்தியா தியேட்டர் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலையான நிலையில், இவரை குடும்பத்தினர் கட்டியணைத்து வரவேற்றனர்.

அல்லு அர்ஜுன் ஜெயலில் இருந்து வீட்டுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்
1/5

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2'. இந்த படத்தின் பிரீமியர் காட்சி பெங்களூரில் உள்ள சந்தியா தியேட்டரில் போடப்பட்ட போது, கூட்டநெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் உயிரிழந்தார்.
2/5

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரில், தெலுங்கானா காவல்துறை வழக்கு பதிவு செய்து, இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனை நேற்று கைது செய்த சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
3/5

இந்த வாழ்க்கை விசாரித்த, நம்பள்ளி நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. இதனால் எதிர்த்து இடைக்கால ஜாமீன் பெற அல்லு அர்ஜுன் தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், உடனடி வழக்காக எடுத்து அல்லு அர்ஜுன் பிரச்னையை விசாரித்த நீதிமன்றம், 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.
4/5

இது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நிம்மதியை கொடுத்த போதிலும், நம்பள்ளி நீதிமன்றத்தில் தீர்ப்பின் படி அல்லு அர்ஜுனை சஞ்சல்குடா சிறைக்கு அனுப்பட்டார். உயர்நீதி மன்றத்தின் உத்தரவு குறித்த சில முக்கிய பேப்பர்ஸ் வர தாமதம் ஆனதால் அல்லு அர்ஜுன் ஒரு நாள் இரவு சிறையில் கழிக்க வேண்டிய நிலை உருவானது.
5/5

இன்று காலை நீதிமன்றத்தில் இருந்து விடுதலையான அல்லு அர்ஜுன், அருகே இருந்த தன்னுடைய மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கு வருடைய ஒட்டு மொத்த குடும்பமும் கூடி அவரை கட்டி அணைத்து வரவேற்றனர். அல்லு அர்ஜுன் மகன், மகள், மனைவி ஸ்ரேயா ரெட்டி, சகோதரர் அல்லு சிரிஷ் ஆகியோர் அல்லு அர்ஜுனை வரவேற்றனர். மேலும் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி எடுக்கப்பட்ட பின்னர் அல்லு அர்ஜுன் வீட்டுக்குள் சென்றார்.
Published at : 14 Dec 2024 11:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion