JK Statehood: ஜம்மு & காஷ்மீருக்கு இன்று மீண்டும் மாநில அந்தஸ்து? மோடி - அமித் ஷா மீட்டிங் இதுக்கு தானா?
JK Statehood: ஜம்மு & காஷ்மீருக்கு வெகு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JK Statehood: ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக, கேள்விப்பட்டதாக ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு & காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து?
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் விரைவில் மாநில அந்தஸ்து பெறும் என்ற வதந்திகளை குறிப்பிட்டு, முதலமைச்சர் ஒமர் அப்துல்லா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நேர்மறையான சில விஷயங்கள் நடந்து வருகிறது, ஆனால் அடுத்த சில நாட்களில் ஒன்னும் நடக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடுத்தடுத்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சந்தித்ததை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்டெடுப்பது குறித்த ஊகங்களுக்கு மத்தியில் ஒமர் அப்துல்லாவின் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
அடுத்தடுத்து மீட்டிங்..
கடந்த ஞாயிறன்று டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்தார். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குடியரசு தலைவரை சந்தித்தார். அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் ஆளுநரையும், பாஜக தலைவர் உள்ளிட்ட தலைவர்களையும் தொடர்புகொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சந்திப்புகளுக்கான காரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
இன்று அறிவிப்பு வெளியாகிறதா?
இந்நிலையில் ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஜம்மு-காஷ்மீரில் நாளை என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய அனைத்து சாத்தியமான விஷயமான நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ஜம்மு-காஷ்மீருக்கு சாதகமான ஒன்று நடக்கும் என்று நான் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஆனால் நாளை அல்ல” என குறிப்பிட்டு இருந்தார். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலை மறுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ இது வெறும் உள்ளுணர்வு. நாளை இந்த நேரத்தில் பார்ப்போம்” என ஒமர் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால், இன்று ஏதேனும் முக்கிய முடிவு வெளியாகுமோ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
6 ஆண்டுகள் முடிவு:
சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 4ம் தேதி ட்ஜம்மு & காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் அதை மீட்டெடுக்கக் கோரி வருகின்றனர். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் பல சந்தர்ப்பங்களில், மாநில அந்தஸ்து மீட்டெடுப்பதாக உறுதியளித்துள்ளனர், ஆனால் எந்த காலக்கெடுவும் கொடுக்கவில்லை.
இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்தியது. இதன் விளைவாக யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக உமர் அப்துல்லா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான், ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.





















