விஜய் அமைதிக்கு காரணம் ஜான் ஆரோக்கியசாமியா? தொண்டர்கள் கொந்தளிப்பு! 2026 தேர்தல் வியூகமா?
வியூகம் என்ற பெயரில் விஜயை செயல்படவிடாமல் ஜான் ஆரோக்யசாமி தடுப்பதாக சொல்கின்றனர்.
ஜான் ஆரோக்யசாமி strategy வேணாம். கொந்தளிக்கும் VIRTUAL WARRIORS. மற்றக்கட்சிகள் எல்லாம் பிரச்சாரத்தை தொடங்கியும் விஜய் மட்டும் இன்னும் அமைதியாக இருப்பது அவரது தொண்டர்கள் இடையே அதிருப்தியை கிளப்பியுள்ள நிலையில், வியூகம் என்ற பெயரில் விஜயை செயல்படவிடாமல் ஜான் ஆரோக்யசாமி தடுப்பதாக சொல்கின்றனர்.
2026-ல் தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஆளும் கட்சியான திமுக ஓரணியில் தமிழ் நாடு என்ற பிரச்சாரத்தையும், எதிர்கட்சியான அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தையும் செய்துவருகிறது. அதேபோல், தேமுதிக, பாமக-வும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டும் இன்னும் silent mode-லே யே இருப்பதாக அவரது தொண்டர்களே குற்றம் சாட்டி வருகின்றனர். அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆணவப் படுகொலை தொடர்பாக விஜய் வாய் திறக்கவில்லை. விஜயின் இந்த அமைதியே அவரது தொண்டரகள் இடையே பேசு பொருளானது. அதே நேரம் இந்த சம்பவத்திற்கு பிறகு தவெக செயலி வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் ஆணவப்படுகொலைக்கு கண்டனம் தான் தெரிவிக்கவில்லை அதன்பின்னர் நடக்கும் நிகழ்ச்சி என்பதால் அந்த நிகழ்ச்சியிலாவது ஆணவப்படுகொலை சம்பவம் குறித்து எதாவது பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், விஜய் அந்த நிகழ்ச்சியிலும் இது தொடார்பாக வாய் திறக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த 10 நாட்களாக பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயம் ஆக்க கூடாது என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக போராட்டம் செய்து வரும் தூய்மை பணியார்களையாவது சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக விஜய் பேசுவார் என்று தவெக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. தவெக சார்பில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் மட்டுமே போராட்ட களத்திற்கு சென்றனர். இது தவெக தொண்டர்களை திருப்தி படுத்தவில்லை. 2026-ல் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற கனவில் இருப்பவர் மக்கள் பிரச்சனைகளின் போது ஒதுங்கி இருந்தால் எப்படி மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை வரும் என்ற கேள்வியையும் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கின்றனர்.
இச்சூழலில் தான் விஜயின் இந்த மயான அமைதிக்கு பின்னணியில் அவரது ஆலோசகரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான ஜான் ஆரோக்யசாமி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, ஜான் ஆரோக்யசாமி தான் விஜயை முக்கிய பிரச்சனைகளின் போது கூட பேசவிடாமல் தடுத்து வைத்துள்ளதாக சொல்கின்றனர் பனையூர் வட்டாரங்களில். “அண்ணா..எல்லா டைம் ல யூம் நீங்க பேசினீங்கனா... மக்கள் கிட்ட உங்க மேல இருக்குற அந்த ஸ்டார் அந்துஸ்த்து கொறஞ்சுடும் அண்ணே.. நீங்க ஸ்டார் மாதிரி...அப்பப்போ தான் வெளியே வருனும். அப்போதான் அந்த எதிர்பார்ப்பு இருக்கும்” என்று விஜயிடம் சொல்லி அவரை செயல்படவிடாமல் தடுப்பதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மக்கள் போராட்ட களத்தில் முன் நின்று செயல்படுவதும் ஆட்சி அதிகாரத்தை அடைவதற்கான ஒரு வழி.
கடந்த ஆறு மாதங்களாக தமிழ் நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் இருந்தும் அதை எல்லாம் விஜய் சரியாக முன்னெடுத்து அரசியல் செய்யவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஜான் ஆரோக்யசாமி தான். அவர்தான் விஜயை எந்த விசயத்தில் அவர் போக்கில் செயல்படவிடாமல் வியூகம், வியூகம் என்ற பெயரில் தடுத்து வைத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. ஜான் ஆரோக்யசாமி சொல்வதை எல்லாம் கேட்டு தலையை ஆட்டாமல் இனியாவது விஜய் விழித்துக்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் தவெக தொண்டர்கள்.




















