மேலும் அறிய
Aadvik Ajithkumar: ஒரே ரத்தம் அப்படி தான் இருக்கும்; அப்பா அஜித்தை போல் கார் ரேஸுக்கு பயிற்சி எடுக்கும் ஆத்விக் - வைரல் போட்டோஸ்!
அஜித்தைப் போன்று அவரது மகன் ஆத்விக்கும், கார் ரேஸில் அதிக ஈடுபாடு செலுத்தி வரும் நிலையில், மிகா கார்டிங் அரங்கில் ஆத்விக் கார் ஓட்டும் வீடியோ மற்றும் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகனுக்கு பயிற்சி கொடுக்கும் அஜித்
1/4

கார் மற்றும் பைக் ரேஸ் மீது காதல் கொண்ட அஜித், தற்போது குறுகிய காலம் வரையில் சினிமாவிற்கு பிரேக் விட்டிருக்கிறார். அவர் தனது முழு கவனத்தையும் கார் ரேஸ் மீது செலுத்தி வருகிறார். ஏற்கனவே துபாய் கார் ரேஸில் அஜித் தலைமையிலான அணி 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது. இதையடுத்து இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் அணி 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது.
2/4

இந்த நிலையில் அஜித்தைப் போன்று இப்போது அவரது மகன் ஆத்விக்கும் கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே பள்ளியில் நடைபெற்ற ரன்னிங் ரேஸ் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அதே போல் கால்பந்து, கோ கார்ட் ரேஸ் போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
Published at : 03 Apr 2025 11:34 PM (IST)
மேலும் படிக்க





















