Iran on Hormuz: அப்பாடா.! இந்தியாவுக்கு நிம்மதி; பெட்ரோல், டீசல் பிரச்னை வராதுன்னு நம்பலாம்; ஈரானின் முக்கிய அறிவிப்பு
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பு, இந்தியாவிற்கு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது. ஆம், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு வராது என நம்பலாம். அந்த அறிவிப்பு என்ன.?

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இதனால், இந்தியாவிற்கு பெட்ரேல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குறைந்துள்ளதாகவே கருதப்படுகிறது. ஈரானின் அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் கூறியுள்ளது என்ன.?
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஹார்முஸ் ஜலசந்தி, அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அவற்றின் மேற்கத்திய நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஈரானின் அரசு ஊடகமான IRIB மூலம் நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் வெடித்ததில் இருந்து, கிட்டத்தட்ட அனைத்து வணிகப் போக்குவரத்தையும் நிறுத்தியுள்ள உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை மீது, பல நாட்கள் நிச்சயமற்ற தன்மை நிலவியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டம் மற்றும் அது தொடர்புடைய தீர்மானங்களின்படி, போர் காலத்தில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் உரிமை ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு உள்ளது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அவர்களின் ஆதரவு நாடுகளைச் சேர்ந்த எந்தவொரு கப்பல்களும் நீர்வழியில் காணப்பட்டால், அவை நிச்சயமாகத் தாக்கப்படும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஹார்முஸ் ஜலசந்தி மூடல்
கடந்த வாரம் சனிக்கிழமை ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, இந்த ஹார்முஸ் ஜலசந்தி நடைமுறையில் மூடப்பட்டுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கை, எண்ணெய் விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளது. அதோடு, உலகப் பொருளாதாரத்திற்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாயன்று, சீனக் கொடியுடன் கூடிய கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த அனுமதிப்பதாக ஈரான் குறிப்பிட்டது. மத்திய கிழக்கு போர் தொடங்கியதிலிருந்து ஈரான் மீதான சீனாவின் நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை ஈரான் அதிகாரிகள் விவரித்துள்ளனர். பாரசீக வளைகுடாவில் உள்ள துறைமுகங்களுக்கான ஒரே கடல் வழி ஹார்முஸ் ஜலசந்தி என்பதால், இந்த முடிவு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
கடும் போரிலும் இதுவரை மூடப்படாமல் இருந்த ஹார்முஸ் ஜலசந்தி
உலக அளவில், கடல் வழியாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில், ஐந்தில் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இது, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. எனினும், இதன் முழுமையான முற்றுகை, ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான முக்கிய கிழக்கு-மேற்கு கப்பல் பாதைகளுக்கு இடையூறு விளைவிக்காது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குவைத், ஈராக் மற்றும் ஈரானின் கடற்கரைகளால் சூழப்பட்ட பாரசீக வளைகுடா, உண்மையில் ஒரு முட்டுச்சந்தாக உள்ளது. இருந்தாலும், பிராந்தியத்திற்குள் வர்த்தகம் செய்வதற்கு இந்த நீர்வழி இன்றியமையாததாக உள்ளது. உலகின் 10-வது பெரிய கொள்கலன் முனையம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பொருட்களை மறுபகிர்வு செய்யும் ஒரு முக்கிய மையமான துபாயின் ஜெபல் அலி துறைமுகத்திற்கு இதுதான் ஒரே பாதை.
ஹார்முஸ் ஜலசந்தி, இதற்கு முன்பு வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு ஒருபோதும் மூடப்பட்டதில்லை. 1980-ம் ஆண்டு முதல் 1988-ம் ஆண்டு வரையிலான ஈரான்-ஈராக் போரின் போது கூட, எண்ணெய் டேங்கர்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், இந்த ஹார்முஸ் நீரிணை வழியாக வணிகப் போக்குவரத்து தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















