US India Russia Crude Oil: “உங்களுக்கு 30 நாள் டைம்“; இந்தியாவிற்கு உத்தரவிட்ட ட்ரம்ப் அரசு.! எதுக்காகன்னு தெரியுமா.?
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, ஒரு கன்டிஷனுடன் அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நடந்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் முக்கிய இடம் வகிப்பதால், அதனை கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடமிருந்து தற்காலிகமாக எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியாவிற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அதுவும், 30 நாட்களுக்கு மட்டும் தான்.
இந்தியாவிற்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் வருமா.?
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போா் காரணமாக, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அதோடு, அவ்வழியாக கப்பல்களை அனுமதிக்க முடியாது என்றும், மீறினால் தாக்குதல் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் 40 சதவீதம் அந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு வரப்படுகிறது.
இதனிடையே, அடுத்த 25 நாள்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு இந்தியாவிடம் இருந்தாலும், ஹார்முஸ் நீரிணையில் இதே நிலை தொடரும் பட்சத்தில், இங்கும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்படும்.
ரஷ்யா எண்ணெய் - இந்தியாவிற்கு அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி
இந்த சூழ்நிலையில் தான், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க, இந்தியாவிற்கு 30 நாட்கள் அனுமதி அளித்துள்ளது அமெரிக்கா.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், “அதிபர் டிரம்பின் எரிசக்தி நிகழ்ச்சி நிரலின் விளைவாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த மட்டங்களை எட்டியுள்ளது.
உலக சந்தையில் எண்ணெய் வரத்து தொடர்வதை உறுதி செய்வதற்காக, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக, கருவூலத் துறை தற்காலிகமாக 30 நாள் விலக்கு அளிக்கிறது. இந்த குறுகிய கால நடவடிக்கை, ரஷ்ய அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது. ஏனெனில், இது ஏற்கனவே கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை மட்டுமே அங்கீகரிக்கிறது.
இந்தியா, அமெரிக்காவின் அத்தியாவசிய பங்காளியாகும். மேலும், புது டெல்லி அமெரிக்க எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம். இந்த இடைநிறுத்த நடவடிக்கை, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஈரானின் முயற்சியால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்.” என்று ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.
President Trump’s energy agenda has resulted in oil and gas production reaching the highest levels ever recorded.
— Treasury Secretary Scott Bessent (@SecScottBessent) March 6, 2026
To enable oil to keep flowing into the global market, the Treasury Department is issuing a temporary 30-day waiver to allow Indian refiners to purchase Russian oil.…
இந்தியாவிற்கு உதவ தயாராக இருக்கும் ரஷ்யா
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், 9.5 மில்லியன், அதாவது 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. ரஷ்யா இந்தியாவின் 40 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய தயாராக உள்ளது.
முன்னதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) ரஷ்யாவிடமிருந்து 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















