மேலும் அறிய

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

தவெக தலைவர் விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள், அரசியல் சதியா என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, அரசியல் களம் புகுந்துள்ளார். ஆரம்பத்தில் அதிரடியாக பேசி வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், கரூரில் நடந்த துயர சம்பவம், அந்த கட்சியின் மீது படிந்த அழியாத கறையாக மாறியது. அதலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த அந்த கட்சி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கும் - திமுகவிற்கும் இடையே தான் போட்டி என பேசி வருகிறார். இதனிடையே விஜய்க்கும் - மற்றொரு நடிகைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக, பாஜக மாநில தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அந்த தலைவர் மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில் தான், கணவர் விஜயிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பொதுவெளியில் கசிந்தது. சங்கீதாவின் மனுவில் விஜய்க்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. ஒரு சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக ஆதரவாளர்கள் அடுத்த என்பதை போன்று செய்வதறியாமல் திகைத்து போயுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை தெரிவித்து வந்தாலும், விஜய் தரப்பிலிருந்து இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் வரவில்லை.

இதனிடையே, சரியாக தேர்தல் நெருக்கத்தில் வெளியாகியுள்ள சங்கீதாவின் விவாகரத்து மனுவின் பின்னணியில், விஜய்க்கு எதிரான சதி இருக்குமோ என்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை. பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே தங்களது தலைவருக்கு இருக்கும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, ஒருவரது தனிப்பட்ட பிரச்னையை திமுக மற்றும் பாஜகவினர் அரசியல் சதி செய்வதாக தவெக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையாகிவிடாது, முறையான விசாரணைக்கு பிறகே அவை நிரூபணம் செய்ய முடியும். ஆனால், எதிர்தரப்பின் கருத்தை கூட கேட்காமல், விஜய் மீது குற்றவாளி முத்திரை குத்த தொடங்கியிருப்பதை ஏற்கமுடியாது எனவும் பேசி வருகின்றனர். விரைவில் விஜய் தரப்பில் இருந்தும் விவாகரத்து மனு மற்றும் மனைவி சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்க அறிக்கை வரும் என தவெக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

160 கி.மீ. ரயில் பாதை ‘டபுள்’! விழுப்புரம் - காட்பாடி திட்டத்திற்கு முக்கிய ஒப்புதல்
160 கி.மீ. ரயில் பாதை ‘டபுள்’! விழுப்புரம் - காட்பாடி திட்டத்திற்கு முக்கிய ஒப்புதல்
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10, 20 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget