மேலும் அறிய

Priyanka Chopra: அப்படிப்போடு.. ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கும் பிரியங்கா சோப்ரா!

Oscar Academy Awards 2026பிரியங்கா சோப்ரா 2016 ஆம் ஆண்டில் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பின்னர்  2017ம் ஆண்டில் பார்வையாளராக கலந்து கொண்டார்.

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கும் நபர்களின் பட்டியலில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயர் இடம் பெற்றுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 16ம் தேதி நடைபெறுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக உலகமெங்கும் இருந்து சினிமா துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்கவுள்ளனர். ஆஸ்கர் விருது சினிமாத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இப்படியான நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

இதில், வில் அர்னெட், ராபர்ட் டௌனி, அனி ஹேத்வே, பால் மெஸ்கல், வெய்னத் பால்ட்ரோ ஆகியோருடன் சேர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா பெயரும் இடம் பெற்றிருக்கிறது. இந்த சம்பவம் அவரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை பிரியங்கா சோப்ரா ஏற்கனவே தொகுத்து வழங்கியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

பிரியங்கா சோப்ரா 2016 ஆம் ஆண்டில் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பின்னர்  2017ம் ஆண்டில் பார்வையாளராக கலந்து கொண்டார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்படியான நிலையில் கோல்டன் குளோப்ஸ் 2026  விருது வழங்கும் விழாவிலும் பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளராக களம் காண்கிறார். சமீபத்தில் பிரியங்கா சோப்ரா நடித்த தி பிளஃப் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அமேசனா ஓடிடி தளத்தில் இந்த படம் அதிக பார்வையாளர்களை பெற்ற திரைப்படமாக முதலிடம் பெற்றுள்ளது. 

ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி மார்ச் 16ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை நடிகை தீபிகா படுகோனே தொகுத்து வழங்கிய கௌரவத்தைப் பெற்றிருந்தார். பிரியங்கா சோப்ரா இந்தாண்டு இடம்பெற்றிருப்பது நிச்சயம் சிறப்பு சேர்க்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் பிரியங்கா சோப்ரா எஸ்.எஸ். ராஜமௌலியின் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார். மகேஷ் பாபு, பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோரோடு மந்தாகினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இது பிரியங்காவின் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Embed widget