மேலும் அறிய
Diwali 2025 Movie Release: லோகா முதல் டியூட் வரை... இந்த தீபாவளிக்கு திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
Diwali 2025 Movie Release Tamil: இந்த தீபாவளிக்கு திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களின் லிஸ்ட் இதோ
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் , பைசன் , டியூட் , டீசல் , லோகா , தம்மா
1/6

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜூ நடித்துள்ள படம் டியூட். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் டியூட் திரைப்படம் வெளியாக இருக்கிறது
2/6

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் டீசல். அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வ சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
3/6

நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன். துருவ் விக்ரம் , அனுபமா பரமேஸ்வரன் , ரஜிஷா விஜயன் , பசுபதி ஆகியோர் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கபடியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் பைசன் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது
4/6

இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா , ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ஹாரர் காமெட்டி திரைப்படம் தம்மா. ஆதித்யா சர்போட்கார் இப்படத்தை இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
5/6

பெல்லம்கொண்டா சார் ஶ்ரீனிவாஸ் ,மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இயகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி வெற்றிபெற்ற படம் கிஷ்கிந்தாபுரி. ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் அட்கோபர் 17 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது
6/6

துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் , நஸ்லென் , சாண்டி மாஸ்டர் ஆகியோர் நடித்த படம் லோகா. கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது லோகா. மலையாளத்தின் முதல் பெண் சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகியுள்ள லோகா 1 சந்திரா வரும் அக்டோபர் 20 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது
Published at : 13 Oct 2025 04:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















