மேலும் அறிய

Trump Vs Mojtaba Khamenei: ட்ரம்ப்பே, அத சொல்ல நீங்க யாரு.?; ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா பத்தி இப்படி சொல்லிட்டாரே.!

மறைந்த ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனியின் 56 வயதான மகன் மொஜ்தபா கமேனி, தனது தந்தைக்குப் பிறகு இஸ்லாமிய குடியரசின் புதிய தலைவராக பொறுப்பேற்பது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி அந்நாட்டின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடமிருந்து கடுமையான எதிர்வினையைப் பெற்றுள்ளது. இந்த நியமனம் குறித்து அவர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். ஈரானின் உயர் தலைமைப் பதவியை மொஜ்தபா கமெனி ஏற்றுக்கொள்வதை தான் ஏற்கவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

'கமேனியின் மகன் முட்டாள்'

ஈரானின் புதிய தலைமை குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நாட்டிற்கு "நல்லிணக்கத்தையும் அமைதியையும்" கொண்டு வரும் ஒரு தலைமையை அமெரிக்கா ஈரானில் விரும்புகிறது என்றார். உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், "அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள், கமேனியின் மகன் ஒரு முட்டாள்" என்று விமர்சித்துள்ளார்.

மேலும், கமேனியின் கொள்கைகளைத் தொடரும் ஒருவரை தலைவராக்குவது, அமெரிக்காவை "5 ஆண்டுகளில்" மீண்டும் போரில் ஈடுபட நிர்பந்திக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வெனிசுலாவைப் போன்ற ஆட்சி மாற்றம் குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவைப் போலவே ஈரானிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்க அதிபர் எழுப்பியுள்ளார். ஈரானின் உச்ச தலைவரின் நியமனத்தில் தானே நேரடியாக ஈடுபட வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். "வெனிசுலாவில் டெல்சி நியமனத்தில் நான் ஈடுபட்டது போல், ஈரானிலும் உச்ச தலைவரின் நியமனத்தில் நான் ஈடுபட வேண்டியிருக்கும்." என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை மூலம், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நடவடிக்கையை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். ட்ரம்பின் கூற்றுப்படி, அமெரிக்க ராணுவம் இந்த நடவடிக்கையை வெறும் 30 நிமிடங்களில் மேற்கொண்டது. அதன் பிறகு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் அதிபராகப் பொறுப்பேற்றார்.

நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்தும் ட்ரம்ப் ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் மன்னிப்பு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

"போரைத் தவிர வேறு எதையும் நெதன்யாகு மனதில் வைத்திருப்பதை நான் விரும்பவில்லை" என்று ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக, லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் ஆகிய மூன்று தனித்தனி வழக்குகளில் நெதன்யாகு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். இருப்பினும், அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
Embed widget