மேலும் அறிய
30 ஆண்டுகளாக திரையரங்கில் ஓடும் ஷாருக் கான் கஜோல் நடித்த 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'
30 Years of Dilwale Dulhania Le Jayenge : ஷாருக் கான் கஜோல் நடித்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை கடந்துள்ளது
ஷாருக் கான் , கஜோல் , தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே
1/6

1995ஆம் ஆண்டு ஷாருக் கான், கஜோல் நடித்து அக்டோபர் 20ஆம் தேதி வெளியானது தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் வெளியானது. யாஷ் சோப்ரா இப்படத்தை தயாரித்திருந்த நிலையில், ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமானார். வெறும் 4 கோடியில் தயாரான இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. ஷாரூக்கான் - கஜோல் ஜோடி பாலிவுட் ரசிகர்களின் பேவரைட்டாகவும் அமைந்தது. மேலும் இப்படத்தில் அம்ரிஷ் பூரி, ஃபரிதா ஜலால், அனுபம் கெர், சதீஷ் ஷா மற்றும் ஹிமானி ஷிவ்புரி மற்றும் பலர் நடித்த நிலையில் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படம் 10 பிலிம்பேர் விருதுகளை வென்றது.
2/6

நேற்றோடு இப்படம் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இப்படம் தான் இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இப்படம்.
3/6

இந்தியாவின் மும்பை நகரில் உள்ள மாராத்தா மந்திர் (Maratha Mandir) திரையரங்கில் Dilwale Dulhania Le Jayenge என்கிற இந்திப் படம் 30 ஆண்டுகளாகத் திரையிடப்பட்டு வருகிறது.
4/6

இன்றும் இப்படத்தை வார நாள்களில் கல்லூரி மாணவர்கள், இளம் தம்பதியர் படத்தைக் காண வருவதாகத் திரையரங்கின் தலைவர் மனோஜ் தேசாய் (Manoj Desai) கூறுகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 500 பேர் வரை கூடுவது உண்டு என்று அவர் கூறியுள்ளார்
5/6

ஒரு பெண் 20 ஆண்டுகளாகப் படத்தைக் காணச் செல்கிறார்.அவரிடம் கட்டணம்கூட வசூலிப்பதில்லை என்றார் தேசாய்.
6/6

2015ஆம் ஆண்டு படம் திரையிடப்படுவது நிறுத்தப்படவிருந்தது.ஆனால் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் படம் இன்றுவரை தொடர்கிறது.. இன்றும் BMS Booking இல் உள்ளது.
Published at : 21 Oct 2025 10:27 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















