மேலும் அறிய

Ration Shop Employees Salary : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்... எவ்வளவு தெரியுமா.? அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Ration Shop Employees Salary : தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களில் விற்பனையாளர்களுக்கு 9,990 முதல் 39,900  வரை ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது., மேலும் கட்டுனர்களுக்கு 9,000 முதல் 35,000 புதிய காலமுறை ஊதியம் வழங்கபட இருப்பதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதிய திட்டம், திருமண உதவித்திட்டம், கடன் உதவித்திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து வழங்க கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக பரிந்துரைகளை வழங்கிட கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தலைமையில் ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. 

இதனையடுத்து நியாய விலைக் கடை பணியாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக கலந்தாய்வு செய்தும், பரிசீலனை செய்தும் குழு தனது பரிந்துரைகளை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு சமர்ப்பித்துள்ளது.ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த வகையில்  கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த ஒரு வருடமாகியுள்ள பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே விற்பனையாளருக்கு 6250 ரூபாயும், கட்டுநருக்கு 5500 ரூபாய் வழங்கப்பட்டது. இதனை  விற்பனையாளருக்கு 7500 ரூபாய் எனவும், கட்டுநருக்கு 6600 ரூபாய் உயர்த்தி வழங்கப்படலாம் என பரிந்துரை வழங்கப்பட்டது. 

இது போன்ற பல்வேறு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு தொடர்பாக பரிந்துரை வழங்கப்பட்டது. இதனையடுத்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இந்த பரிந்துரையின் மூலம் 26,020 பணியாளர்கள் (22,804 விற்பனையாளர்கள் மற்றும் 3,216 கட்டுநர்கள்) பயன் பெறுவார்கள் எனவும், இக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதால் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அவர்கள் பெற்று வரும் மொத்த சம்பளத்தில் சராசரியாக 15% கூடுதல் நிதிப்பயன் கிடைக்கும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காலமுறை ஊதியம் பெற்று வரும் விற்பனையாளர்கள் குறைந்தபட்சமாக ரூ.3039/-ம், அதிகபட்சமாக ரூ.7330/- மும் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவர் எனவும், 

காலமுறை ஊதியம் பெற்றுவரும் கட்டுநர்கள் குறைந்தபட்சமாக ரூ.2706/-ம், அதிகபட்சமாக ரூ.7430/-ம் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவர் எனவும், தற்போது தொகுப்பூதியம் பெற்று வரும் விற்பனையாளர் ஒருவர் கூடுதலாக மாதமொன்றுக்கு ரூ.1250/-ம், கட்டுநர் ஒருவர் ரூ.1100/-ம் பெறுவர், என குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இக்குழுவின் ஊதிய உயர்வு பரிந்துரைகளின்படி, தற்போது பணியிலுள்ள பணியாளர்களின் அடிப்படையில், 

கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய உத்தேச கூடுதல் நிதிச்செலவினம், மாதமொன்றிற்கு ரூ.9.51 கோடியும் ஆண்டொன்றிற்கு ரூ.114.12 கோடியும் என்றும் குறிப்பிட்டு தற்போதைய ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்து உள்ள நிலையில் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடை பணியாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் விற்பனையாளர்களுக்கு 9,990 முதல் 39,900  வரை ஊதிய நிர்ணயம், கட்டுனர்களுக்கு 9,000 முதல் 35,000 புதிய காலமுறை ஊதியம் வழங்கபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மக்கள் இழந்த பணத்தை மீட்கத் தமிழக அரசு தவறிவிட்டது: த.வெ.க. வேட்பாளர் குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் மக்கள் இழந்த பணத்தை மீட்கத் தமிழக அரசு தவறிவிட்டது: த.வெ.க. வேட்பாளர் குற்றச்சாட்டு!
மீஞ்சூரில் பயங்கரம்! வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாணவி மீது கஞ்சா கும்பல் கொடூர தாக்குதல் - நள்ளிரவில் நடந்தது என்ன?
மீஞ்சூரில் பயங்கரம்! வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாணவி மீது கஞ்சா கும்பல் கொடூர தாக்குதல் - நள்ளிரவில் நடந்தது என்ன?
"இனிப் பொறுக்க முடியாது..இந்த ஆட்சி மாற வேண்டும்" - தமிழக விவசாயிகளின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
US Iran War: “ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
“ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?
Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
Affordable Sunroof Cars: சன்ரூஃபோட கார் வாங்கணும்னு ஆசை இருக்கா.? அதுவும் ரூ.8 லட்சம் பட்ஜெட்டுல.? இதோ உங்களுக்கான லிஸ்ட்
சன்ரூஃபோட கார் வாங்கணும்னு ஆசை இருக்கா.? அதுவும் ரூ.8 லட்சம் பட்ஜெட்டுல.? இதோ உங்களுக்கான லிஸ்ட்
Iran Vs America: “இது ட்ரெய்லர் தான், படம் இன்னும் பாக்கி இருக்கு“; வீடியோ போட்டு அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்
“இது ட்ரெய்லர் தான், படம் இன்னும் பாக்கி இருக்கு“; வீடியோ போட்டு அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
Embed widget