Trump Zelensky: அழைத்து வந்து அசிங்கப்படுத்திய ட்ரம்ப், செய்வதறியாமல் கிளம்பிய ஜெலன்ஸ்கி: வீடியோ வைரல்
Trump Zelensky: ரஷ்யா உடனான போர் தொடர்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Trump Zelensky: ட்ரம்ப் உடனான கருத்து மோதலால் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே, ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டார்.
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை:
ரஷ்யா மற்று உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வரும் பணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார். அதேநேரம், இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ராணுவ உதவிகளுக்கு ஈடாக, உக்ரைனில் உள்ள சில கனிமவளங்களை வெட்டி எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையேயான இந்த சந்திப்பு தொடங்கிய சில நிமிடங்களில், ஓவல் அலுவலகத்தில் இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
வார்த்தை மோதல்கள்:
சந்திப்பின்போது பேசிய ட்ரம்ப், “நீங்கள் பெரும் சிக்கலில் இருக்கிறீர்கள், இந்த போரை வெல்லும் சூழலில் இல்லை” என குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, “நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இருக்கிறோம், இவ்வளவு காலமாக நாங்கள் வலுவாக இருந்தோம். அதற்கு (உங்கள் ஆதரவுக்கு) நாங்கள் நன்றி” என்றார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், "இந்த வழியில் கையாள்வது விஷயங்களை மிகவும் கடினமாக்கும் என்று நான் பயப்படுகிறேன். நீங்கள் லட்சக்கணக்கான மக்களின் உயிருடன் சூதாடுகிறீர்கள். நீங்கள் மூன்றாம் உலகப் போருடன் சூதாடுகிறீர்கள், நீங்கள் செய்வது இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதை” எனக்குறிப்பிட்டார்.
Holy shit! Check out this dig from Zelensky where he implies Trump is using Putin’s talking points:
— CALL TO ACTIVISM (@CalltoActivism) February 28, 2025
Trump: “If you didn't have our military equipment, this war would've been over in 2 weeks”
Zelensky: “I heard it from Putin. In 3 days.”
pic.twitter.com/6G3HhyZAWK
முற்றிய வாதம்:
பேச்சுவார்த்தையில் இணைந்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பேச, அவரிடம் ஜெலென்ஸ்கி "சத்தமாகப் பேசுவதை" நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். உடனே போரை முடிவுக்குக் கொண்டுவர "ராஜதந்திரம் தேவை" என்று வான்ஸ் குறிப்பிட்டார். ஆனால் ஜெலென்ஸ்கி "என்ன வகையான ராஜதந்திரம்?" என்று ஆவேசமாக கேட்க, அதிபர் அலுவலகத்தில் "அவமரியாதை" செய்வதாக அவர் மீது வான்ஸ் குற்றம் சாட்டினார்.’
வான்ஸ்க்கு ஆதரவாக பேசிய டொனால்ட் டிரம்ப், "நாங்கள் உங்களுக்கு 350 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளோம், நாங்கள் உங்களுக்கு ராணுவ உபகரணங்களை வழங்கினோம், மேலும் நிறைய ஆதரவையும் வழங்கினோம். உங்களிடம் எங்கள் ராணுவ உபகரணங்கள் இல்லையென்றால், இந்தப் போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும்" என்று ஜெலென்ஸ்கியை கடுமையாக சாடினார்.
திட்டும் விதமாக பேசிய ட்ரம்ப்:
ட்ரம்பிற்கு பதிலடி தந்த ஜெலன்ஸ்கி, “ஆம்-ஆம், இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட pஓர் நீடித்திருக்காது. புதின் கூட இதையே தான் சொன்னார், அப்போது பேசிய ட்ரம்ப், “இதுபோன்று வணிகம் செய்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், உங்களிடம் வீரர்கள் குறைவாக இருக்கிறார்கள், பின்னர் நீங்கள் 'எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம்' என்றும், 'நான் தொடர்ந்து போராட விரும்புகிறேன்' என்றும் எங்களிடம் கூறுகிறீர்கள் - பாருங்கள்... நீங்கள் இப்போதே போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும், அப்போதுதான் தோட்டாக்கள் பறப்பதை நிறுத்த முடியும், இனி எந்த உயிர்களும் இழக்கப்படாது. நான் இங்கே இருக்கிறேன், எனக்கு போர் நிறுத்தம் வேண்டும், ஆனால் உங்களுக்கு போர் நிறுத்தம் வேண்டாம் என்பது தெளிவாகிறது” என திட்டும் விதமாக பேசினார்.
காரசார வார்த்தைகள்:
"உங்கள் முன்னோடிகளிடம் போர் நிறுத்தம் பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்" என்று ஜெலென்ஸ்கி மீண்டும் டிரம்பிடம் கேட்டார். அதற்கு டிரம்ப் உடனடியாக "அது பைடன் என்ற நபர், அவர் ஒரு புத்திசாலி நபர் அல்ல" என்று முன்னாள் அமெரிக்க அதிபரை அவமதித்து கூறினார். "ஆனால் அது உங்கள் அதிபர்தான்" என்று ஜெலென்ஸ்கி ஆவேசமாக பேசினார். இறுதியாக பேசிய ட்ரம்ப், "உங்களிடம் நான் மிகவும் வெளிப்படையாகச் சொல்கிறேன், நாங்கள் இல்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் இல்லை என்றால் போர்ல் இருந்து நாங்கள் விலகுகிறோம்" என குறிப்பிட்டார்.
ஜெலன்ஸ்கி மீது குற்றச்சாட்டு:
சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “அமெரிக்கா ஈடுபட்டால் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதிக்கு தயாராக இல்லை என்று நான் தீர்மானித்துள்ளேன். அவர் அமெரிக்காவின் அன்பான ஓவல் அலுவலகத்தில் அதை அவமதித்தார். அவர் அமைதிக்கு தயாராக இருக்கும்போது திரும்பி வரலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். மிகவும் நெருடலான சந்திப்பைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்திற்கான முதல் படியாக இருக்கும் முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஜெலென்ஸ்கி வெளியேறினார். இதனால் உக்ரைனில் அமைதிக்கான நம்பிக்கை காலவரையின்றி தாமதமாகிவிட்டதாகத் தெரிகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

