Italy Teacher Suspended: என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
வெளிநாடு ஒன்றில், நர்சரி பள்ளி ஆசிரியை ஒருவர் ஆபாச இணையதளத்தில் மாடலாக பணியாற்றியது தெரிந்து, பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. அது எங்கு தெரியுமா.?

இத்தாலியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பணத்திற்கு ஆசைப்பட்டு, ஆபாச இணையதளத்தில் மாடலாக பணியாற்றியது தெரிந்து, அந்த பள்ளி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
ஆபாச இணையதளத்தில் பகுதி நேர மாடலாக பணியாற்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை
இத்தாலியைச் சேர்ந்தவர் எலேனா மராகா. 29 வயதான இவர், கல்வி அறிவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். 5 ஆண்டுகளாக கத்தோலிக்க நர்சரி பள்ளியில் பணியாற்றிவந்த மராகா, ஆபாச இணையதளம் ஒன்றில் பகுதி நேர மாடலாகவும் இருந்துள்ளார். அதோடு, பாடி பில்டிங் செய்து, போட்டிகளிலும் பங்கேற்று வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரின் பெற்றோருக்கு, எலேனா மராகா ஆபாச இணையதளத்தில் மாடலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் வாயிலாக, மற்ற பெற்றோருக்கும் இதைப்பற்றி தெரியப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
ஆசிரியையை சஸ்பெண்ட் செய்த பள்ளி நிர்வாகம்
பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, எலேனா மராகாவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த எலேனா, பள்ளியில் தான் சம்பாதிப்பது போதவில்லை எனவும், வேலை இல்லாத நேரத்தில், யாரையும் துன்புறுத்தாமல் தான் மாடலாக வேலை செய்வதில் என்ன தவறு என கேட்டு, பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தான் உடற்பயிற்சி செய்து பெற்ற உடற்கட்டைப் பார்த்து பெருமையடைந்ததாகவும், அதை வெளி உலகிற்கு காட்டுவதை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது தனக்கு விருப்பமான ஒன்று எனவும், ஆனால் இணையதளத்தில் தான் பெருமளவில் பணம் சம்பாதிப்பதாகவும் கூறியுள்ளார் எலேனா. விளையாட்டாக ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆபாச இணையதளத்தில் தன்னுடைய ஒரு பக்கத்தை தொடங்கியதாகவும், பள்ளியில் ஒரு மாதத்தில் வாங்கும் சம்பளத்தை, மாடலிங்கில் ஒரே நாளில் சம்பாதித்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய நெறிமுறைகளை வகுக்கும் இத்தாலி கல்வி அமைச்சகம்
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஆசிரியர்கள் வயது வந்தோருக்கான இணையதளங்களில் தோன்றுவதை தடுக்கும் புதிய நெறிமுறைகளை உருவாக்க, இத்தாலி கல்வி அமைச்சகம் தயாராகி வருகிறது. ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளின் கௌரவம் மற்றும் நற்பெயரை கெடுக்கும் வகையிலான அறிக்கைகள், படங்கள் அல்லது நடத்தைகளை தவிர்க்கும் வகையில், இந்த நெறிமுறைகள் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

