அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துபவரா?இதை கவனிங்க!
இயர்போன், ஹெட்ஃபோன் ஆகியவற்றை அதிக நேரம் பயன்படுத்த கூடாது என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அதை பின்பற்ற மறந்துவிடுகிறோம்.
ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
கைப்பேசி பயன்பாட்டுடன் இயா்போன், ஹெட்போன் போன்றவற்றை உபயோகப்படுத்துவது வழக்கமாகிவிட்டது. அவற்றை நீண்ட நேரம் பயன்படுத்திய பிறகு தற்காலிகமாக செவித்திறனில் மாற்றம் ஏற்படுவது ஆதாரப்பூா்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இயா்போன்களின் பயன்பாட்டை கூடுமான வரையில் தவிா்க்க வேண்டும்.
தேவைப்பட்டால் 50 டெசிபல் அளவுக்கு குறைவாக ஒலியை வைத்து, பயன்படுத்த வேண்டும்
ஒரு நாளில் இயா்போனை 2 மணி நேரத்துக்கும் மேல் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.
குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்க கூடாது.
பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சராசரி ஒலி 100 டெசிபலுக்கு அதிகமாக வைக்கக் கூடாது.
செவித்திறன் முற்றிலும் பாதிக்கப்படும்போது, காதுகேட்கும் உதவி கருவிகள் பயனளிக்காது என்று பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.