உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது மனைவி சேர்ந்து வாழ்வதற்காக ஒரு நாளைக்கு ரூ.5,000 கேட்டதாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது மனைவி சேர்ந்து வாழ்வதற்காக ஒரு நாளைக்கு ரூ.5,000 கேட்டதாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஸ்ரீகாந்த். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன்பின் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்பேரில் ஸ்ரீகாந்த் தனது மனைவி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ”என் மனைவி என்னை உடல் ரீதியாக தாக்குதல் நடத்துகிறார். அந்தரங்க உறுப்புகளைத் தாக்கி கொல்ல முயற்சி செய்கிறார்.
மனைவிக்கு பணம் கேட்பதைத் தவிர வேறு சில கோரிக்கைகளும் உள்ளன. என் மனைவிக்கு உடல் ரீதியில் ஒன்றாக இருந்து குழந்தை வேண்டாம் என்று கூறுகிறார். அது அவரின் உடல் தோற்றத்தை மாற்றும் என அவர் பயப்படுகிறார். அதற்கு பதிலாக அவர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த யோசனையை எதிர்க்கிறேன். இதன் மூலமே நிறைய சண்டைகள் வருகின்றன.
திருமணமாகி இரண்டு வருடங்களுக்கும் மேலாகியும், தனது மனைவி தன்னுடன் உடல் ரீதியாக நெருக்கமாக இருக்க மறுத்துவிட்டார். என்னுடன் உடல் ரீதியாக நெருக்கமாக இருக்க ஒரு நாளைக்கு ரூ.5,000 சம்பளம் கேட்கிறார்.
நான் அவளை நெருங்க நினைக்கும்போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவார். நான் தான் காரணம் என எழுதிவைத்து விட்டு இறந்துவிடுவேன் என மிரட்டுவார்.
என் மனைவி கொடுக்கும் மன உளைச்சலால் என் வேலையையும் நான் இழந்துள்ளேன். நான் வேலை செய்து கொண்டிருக்கும்போது என் மனைவி சத்தமாக பாட்டு வைத்து நடனமாடுவாள்” என பல்வேறு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இதையடுத்து ஸ்ரீகாந்த் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். அதற்கு ஈடாக அவர் ரூ.45 லட்சம் பணம் கேட்டுள்ளார் மனைவி. மேலும் தரவில்லையென்றால் தன்னை தானே காயப்படுத்திக்கொள்வேன் என பிளாக்மெயிலும் செய்துள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவியிடம் கேட்டபோது அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். மேலும் தன் மீது அவதூறு பரப்புவதாக புகார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் கவனத்தை பெறவே ஸ்ரீகாந்த் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக மனைவி தெரிவித்துள்ளார். இருப்பினும், ஸ்ரீகாந்த் தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில் தினமும் ரூ.5,000 கோரிக்கையை குறிப்பிடாததால், வழக்கில் சில சந்தேகங்கள் இருப்பதாக காவல்துறை கூறியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

