மேலும் அறிய

Sri Lanka flights halt: இலங்கையில் பொருளாதார நெருக்கடி: சர்வதேச விமானங்களை நிறுத்தும் அபாயம்...

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்:

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை அடுத்து எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உள்ளூர் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில்  விமானத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விமான சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விமானத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்:

இலங்கைக்கு தற்போது  ஓரளவு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் போக்குவரத்து சேவையாக விமான துறை இருக்கிறது. இலங்கையின் சுற்றுலாத்துறை முற்று முழுவதுமாக இந்த விமான போக்குவரத்தை நம்பித்தான் இருக்கிறது. இந்நிலையில் விமானத்துக்கான  எரிபொருளிலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது நிலமையை மிகவும் மோசமடைய செய்திருக்கிறது. ஆகையால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களை தமக்குத் தேவையான அளவு எரிபொருட்களை நிரப்பி வருமாறு இலங்கை விமானத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. ஆகையால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமான சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

போக்குவரத்து செலவு அதிகரிக்கும்:

எரிபொருள் தட்டுப்பாட்டால் சர்வதேச விமானங்கள் இலங்கைக்குள் வரும் எண்ணிக்கையை குறைப்பதற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. விமானங்கள் இலங்கை வந்து திரும்பிச் செல்வதற்காக எரிபொருளை நிரப்பி வருவதால் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் ஏற்றி வரும் பொருட்களின் அளவு குறைவடையும் என சொல்லப்படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால் விமானங்கள் வேறு நாடுகளில் மீண்டும் தரை இறங்கி எரிபொருட்களை நிரப்பி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவ்வாறு செய்தால் விமானங்களுக்கான போக்குவரத்து செலவு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகையால்  சர்வதேச விமானங்கள் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இலங்கைக்கான விமான போக்குவரத்து மட்டும் பயன்படுத்தப்பட்டால் சரக்கு மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பு, இலங்கைக்கு இன்னும் பாதிப்பையே ஏற்படுத்தும். அதேபோல் விமான சேவை குறைக்கப்படும் பட்சத்தில் டிக்கெட்டுக்கான விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Sri Lanka flights halt: இலங்கையில் பொருளாதார நெருக்கடி: சர்வதேச விமானங்களை நிறுத்தும் அபாயம்...

இலங்கைக்கு தற்போது வரை 42 நாடுகளின் விமான சேவைகள் போக்குவரத்தை மேற்கொள்கின்றன. இதில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் மீண்டும் திரும்பி செல்லும் போது எரிபொருட்களை இலங்கையில்தான் நிரப்பி செல்கின்றன. அதேபோல் பெரிய அளவிலான விமானங்கள் மட்டுமே திரும்பிச் செல்வதற்கான எரிபொருளை தாமே சேமித்து வைத்துக் கொள்ள  முடியும்.

தலைவர்களின் கையில்:

ஆகையால் விமான எரிபொருளுக்கான கொள்வனவை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று  வருகிறது. இலங்கை இந்த பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளிலும் பிரச்சனைகளுக்கு, சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் உள்ளூர் போக்குவரத்திற்கான எரிபொருட்கள் இல்லாமல் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது விமான சேவையையும் மட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இலங்கையின் பொருளாதார பிரச்சினை என்பது இடியாப்ப சிக்கலாக மாறியிருக்கிறது. இதனை எவ்வாறு சரி செய்வது என்பது அந்நாட்டு அரசியல் தலைவர்களின் கையில் தான் இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Saudi Arabia Vs Houthis: சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்
சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget