California Shooting: கலிஃபோர்னியா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு.. அதிர்ந்த அமெரிக்கா..
கலிஃபோர்னியாவிலுள்ள தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்தத் துப்பாக்கி சுடுதல் சம்பவத்தில் சிலர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கலிஃபோர்னியாவில் ஒரு துப்பாக்கிச் சுடுதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. கலிஃபோர்னியாவில் ஒரு தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு பிறகு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டுள்ளது.
அந்த உணவு விருந்தில் மதியம் 1.30 மணியளவில் திடீரென்று ஒரு நபர் அங்கி இருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வந்த அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
UPDATE: At least one person was killed and several others were injured after the shooting inside Geneva Presbyterian Church. Here's the latest. https://t.co/WJYmeAK2DB pic.twitter.com/91u5D0WYBQ
— ABC7 Eyewitness News (@ABC7) May 15, 2022
அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் துப்பாக்கி சுடு நடத்தியதற்கு துவேச பிரச்சாரம் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அங்கு இருந்த 30-க்கும் மேற்பட்ட நபர்களிடமும் காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த நபர் தேவாலயத்திற்கு அடிக்கடி வரும் நபரா என்பதையும் விசாரித்துள்ளனர்.
மேலும் இந்த துப்பாக்கிச் சுடுதல் சம்பவத்தில் காயம் அடைந்த 4 பேர் ஆசிய நாட்டைச் சேர்ந்த 4 பேர் காயம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. 66,75,82 மற்றும் 92 வயது மதிக்கத்தக்க நான்கு பேர் இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லகூனா வூட் பகுதியில் அமைந்துள்ள இந்த தேவாலயத்திற்கு வயதானவர்கள் அதிகமான வருவது வழக்கம். அப்படி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்காக கூடியிருந்த போது இந்த துப்பாக்கிச் சுடுதல் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:கட்டுப்பாட்டை இழந்த விமானம்.. பாலத்தில் ஓடிய கார் மீது மோதிய திக் திக்..வைரலாகும் மியாமி வீடியோ..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்