US Temple Burglary: அமெரிக்க கோயிலில் அலேக்காக உண்டியலை தூக்கிய திருடர்கள்.. என்னாச்சு தெரியுமா?
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஹிந்து கோயிலில் உள்ள உண்டியலை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஹிந்து கோயிலில் உள்ள உண்டியலை திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் பார்க்வேயில் இருக்கும் ஹரி ஓம் ராதா கிருஷ்ணா கோயிலில் நடைபெற்றுள்ளது. இந்து கோயிலில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து சேக்ரமென்டோ காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கோயிலில் இருந்து என்ன திருடப்பட்டது என்று போலீசார் தகவல் எதுவும் தெரிவிக்காத நிலையில், வெளியான ஆடியோவில் உண்டியல் திருடப்பட்டதாக தெரியவந்துள்ளது. திருட்டுச் சம்பவம் குறித்து காவல் துறைக்கு புகார் அளித்த நிலையில், கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவில் 6 மர்ம நபர்கள் இருந்ததாகவும் அதில் இருவர் கோயிலுக்குள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தற்போது வரை இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை என்றும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த சம்பவத்தை கண்டித்து, அமெரிக்காவை தளமாகக் கொண்ட வக்கீல் அமைப்பான Coalition of Hindus of North America (CoHNA) சாக்ரமென்டோ காவல்துறை இந்த பிரச்சினையை மிகவும் தீவிரமாக எடுத்து, வெறுப்புவாதத்தின் அடிப்படையில் இந்த குற்றம் அரங்கேறியுள்ளதா என விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
Disturbing news from Sacramento, California where a #HinduTemple has been broken into. We ask @SacPolice to take this issue very seriously and investigate it as a potential hate crime and the violation of a sacred space. Police are asking for public help in identifying the…
— CoHNA (Coalition of Hindus of North America) (@CoHNAOfficial) October 31, 2023
இது தொடர்பாக Coalition of Hindus of North America எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், “ ஹிந்துக் கோயிலில் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சிக்குரிய சம்பவமாகும். இதனை காவல் துறையினர் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் காவல் துறையினர் பொது மக்கள் உதவியை நாடி வருகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசைக்கும் குரு மகராஜும் அவரது மனைவியும் வீட்டில் இருந்தபோது அவர்களுக்கு எச்சரிக்கை ஒலி வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அவர்கள், “ எச்சரிக்கை ஒலி வந்த போது யாரோ உள்ளே இருப்பது தெரியவந்தது. அவர்கள் கதவை உடைக்க முயன்றனர். பின் அதிகாலை நேரம் என்பதால் இருட்டில் அவர்கள் உண்டியலை திருடிச் சென்றனர்” என தெரிவித்துள்ளனர்.
மேலும், திருடர்கள் உண்டியலை மேலே தூக்கி கட்டிடத்தின் பின்னால் கொண்டு செல்வது சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்றுள்ளது. சுமார் 100 பவுண்டுகள் எடையுள்ள உண்டியலை காரின் உள்ளே வைத்துவிட்டு புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Italy: ‘பூனையாக மாறும் பெண்’ .. உடலில் செய்த 20 மாற்றங்கள்.. இத்தாலியில் பொதுமக்கள் அதிர்ச்சி..!